தரமான அம்சங்களுடன் ஒரு லேப்டாப் வேண்டுமா? அப்போ இந்த புதிய Acer லேப்டாப் பாருங்க.!

|

ஏசர் நிறுவனம் தரமான அமசங்களுடன் புதிய ஏசர் ஆஸ்பயர் 7 கேமிங் லேப்டாப்(Acer Aspire 7 gaming laptop) மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது.

 என்னென்ன அம்சங்கள்

என்னென்ன அம்சங்கள்

சமீபத்திய 12வது ஜெனரல் இன்டெல் கோர் மற்றும் ஜிடிஎக்ஸ் கிராபிக்ஸ் போன்ற அம்சங்களுடன் இந்த புதிய லேப்டாப் வெளிவந்துள்ளதால் தினசரி வேலைகளுக்கும், கேமிங் வசதிகளுக்கும் மிக அருமையாக பயன்படும். இப்போது ஏசர் ஆஸ்பயர் 7 கேமிங் லேப்டாப் இன் முழு விவரங்களைப்
பார்ப்போம்.

Samsung Galaxy M32 விலை குறைப்பு.. லக்கு தானா வந்தா வேண்டா சொல்ல கூடாது! புது ரேட் இதான்..Samsung Galaxy M32 விலை குறைப்பு.. லக்கு தானா வந்தா வேண்டா சொல்ல கூடாது! புது ரேட் இதான்..

சூப்பர் டிஸ்பிளே

சூப்பர் டிஸ்பிளே

ஏசர் ஆஸ்பயர் 7 கேமிங் லேப்டாப் ஆனது 15.6-இன்ச் எஃப்சஎச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு சிறந்த பாதுகாப்பு கொடுக்கும் ExaColor தொழில்நுட்ப வசதியும் இந்த லேப்டாப் சாதனத்தில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே வசதிக்கு அதிக
கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பேரு Nokia நியாபகம் இருக்கா? தட்டித் தூக்குங்க: 3நாள் பேட்டரி ஆயுளுடன் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்பேரு Nokia நியாபகம் இருக்கா? தட்டித் தூக்குங்க: 3நாள் பேட்டரி ஆயுளுடன் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

 சிறந்த மென்பொருள் வசதி

சிறந்த மென்பொருள் வசதி

இன்டெல்லின் கோர் i5-1240P பிராசஸர் மற்றும் என்விடியா ஜிடிஎக்ஸ் 1650 ஜிபியு மூலம் இந்த ஏசர் ஆஸ்பயர் 7 கேமிங் லேப்டாப் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த சாதனத்தில் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. இதுதவிர 32ஜிபி வரை DDR4 ரேம் மற்றும் 2டிபி வரை டூயல் SSD-க்கான ஆதரவையும் வழங்குகிறது இந்த புதிய லேப்டாப்.

Best Smartphone: உங்க பட்ஜெட் ரூ.6000-ஆ? அப்போ 1 இல்ல.. மொத்தம் 7 அட்டகாச மாடல்ஸ் இருக்கு!Best Smartphone: உங்க பட்ஜெட் ரூ.6000-ஆ? அப்போ 1 இல்ல.. மொத்தம் 7 அட்டகாச மாடல்ஸ் இருக்கு!

யல் ஃபேன் ஆதரவைக்

வெப்பத்தை வெளியேற்றுவதற்கு டூயல் ஃபேன் ஆதரவைக் கொண்டுள்ளது ஏசர் ஆஸ்பயர் 7 கேமிங் லேப்டாப். மேலும் non-air இன்லெட் கீபோர்டைக்கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் அனைத்து இடங்களிலும் நமது தினசரி வேலைகளை செய்ய முடியும்.

Amazon Fab Phones Fest: அதீத தள்ளுபடியில் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள்- மிஸ் பண்ணாதீங்க!Amazon Fab Phones Fest: அதீத தள்ளுபடியில் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள்- மிஸ் பண்ணாதீங்க!

புதிய தொழில்நுட்பம்

புதிய தொழில்நுட்பம்

அதேபோல் ஹெட்ஃபோன்கள் மற்றும் மைக்குகளில் பின்னணி இரைச்சலை குறைக்கும் PurifiedVoice தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஏசர் ஆஸ்பயர் 7 கேமிங் லேப்டாப் மாடல். மேலும் சமீபத்தில் டெல் நிறுவனம் அறிமுகம் செய்த Latitude, Precision மாடல்களை விட குறைவான எடை மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது இந்த ஏசர் ஆஸ்பயர் 7 கேமிங் லேப்டாப்.

சூப்பர் கேமரா.! இப்படியொரு சியோமி போனுக்காக தான் வெயிட்டிங்.! எப்போது அறிமுகம் தெரியுமா?சூப்பர் கேமரா.! இப்படியொரு சியோமி போனுக்காக தான் வெயிட்டிங்.! எப்போது அறிமுகம் தெரியுமா?

 வைஃபை 6இ, புளூடூ

வைஃபை 6, வைஃபை 6இ, புளூடூத் 5.2, யுஎஸ்;பி டைப்-சி போர்ட், யுஎஸ்பி ஜென் 3.2 போர்ட், தண்டர்போல்ட் 4 போன்ற பல கனெக்டிவிட்டி விருப்பங்களை கொண்டுள்ளது இந்த இந்த ஏசர் ஆஸ்பயர் 7 கேமிங் லேப்டாப். பின்பு தண்டர்போல்ட் 4 ஆதரவுடன் 8K மானிட்டரை இணைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சொன்னா நம்ப மாட்டீங்க: எல்லா இடத்துலயும் Google pay, Phonepe யூஸ் பண்ணதோட சொன்னா நம்ப மாட்டீங்க: எல்லா இடத்துலயும் Google pay, Phonepe யூஸ் பண்ணதோட "பலன்" இத்தனை கோடியா?

 என்ன விலை?

என்ன விலை?

ஏசர் ஆஸ்பயர் 7 கேமிங் லேப்டாப் மாடலின் விலை ரூ.62,900-ஆக உள்ளது. குறிப்பாக ஏசர் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் வழியாக இந்த லேப்டாப் மாடலை வாங்கலாம். அதேபோல் ஏசர் ஆஸ்பயர் 7 கேமிங் லேப்டாப் உடன் Xbox Game Pass Ultimate-க்கான இலவச 1 மாத சந்தாவையும்
பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீமியம் ஸ்மார்ட்போன் என்பதை நிரூபிக்கும் OnePlus Nord 2T: பிரத்யேக அம்சங்கள் என்ன தெரியுமா?ப்ரீமியம் ஸ்மார்ட்போன் என்பதை நிரூபிக்கும் OnePlus Nord 2T: பிரத்யேக அம்சங்கள் என்ன தெரியுமா?

புதிய ஏசர் லேப்டாப்

சிறந்த கேமிங் ஆதரவுடன் தரமான அம்சங்களை கொண்ட லேப்டாப் தேடும் பயனர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாகும். குறிப்பாக இந்த புதிய ஏசர் லேப்டாப் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Acer Aspire 7 gaming laptop Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X