8ஜிபி ரேமுடன் வரும் புதிய ஏசர் ஆஸ்பையர் 5755ஜி லேப்டாப்

மேலும் இதன் 8ஜிபி ராம் இதன் வேகத்தை இன்னும் அதிகரிக்கும். மேலும் இந்த லேப்டாப்பை சற்று கரடுமுரடாக பயன்படுத்தினாலும் தாங்கக் கூடிய ஒரு நல்ல லாப்டாப்பாகும். ஏசர் ஆஸ்பையர் 5755ஜியின் எடை 2.5 கிலோவாகும். இதனால் இதை ஒரு போர்ட்டபுள் லேப்டாப் என்று அழைக்கலாம்.
இதன் திரை 15.6 இன்ச் கொண்டு 1366 x 768 பிக்ஸல் ரிசலூசனைத் தருகிறது. இதன் எச்டிஎம்ஐ போர்ட் எச்டி டிவி வீடியோக்களை சப்போர்ட் செய்யும். இதன் கீபோர்டும் மிக அழகாக அடக்கமாக உள்ளது. அதனால் விரைவாக இதில் டைப் செய்ய முடியும். ஆனால் இந்த கீபோர்ட் பேக்லிட் இல்லாததால் இருட்டான இடத்தில் டைப் செய்வது சற்று கடினமாக இருக்கும்.
இதன் ட்ராக்பேட் மிருதுவாக இருந்தாலும் பெரிதாக இல்லை. அதனால் இதை பயன்படுத்தும் போது சற்று சிரமம் இருக்கும். ஆனால் இதன் மல்டி டச் மூலம் 2 விரல்களால் ஸ்க்ரோல் செய்ய முடியும். இதன் பட்டன்கள் மிக இலகுவானவை.
ஏசர் ஆஸ்பையர் 5755ஜில் டர்போ பூஸ்ட் மூலம் இதன் ப்ராசஸரை 2.9ஜிஹர்ட்ஸ் கடிகார வேகத்தில் இயக்க முடியும். ஆனால் ப்ராசஸரின் காலம் மிக நீண்ட காலம் உழைக்காது. மேலும் இது 4.5 மணி நேரம் தாங்கக் கூடியது.
ஏசர் ஆஸ்பையர் 5755ஜி கோர் ஐ5 ரூ.44000க்கும் கோர் ஐ3 ரூ.33000க்கும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications