புதிய ஏசர் அஸ்பையர் 5733 லேப்டாப்

இவற்றில் முக்கியமாக ஏசர், தேஷிபா, லெனோவா மற்றும் சோனி நிறுவனங்களின் லேப்டாப்புகள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கின்றன. குறிப்பாக ஏசர் மற்றும் தோஷிபாவின் லேப்டாப்புகள் தரமானவைகளாகவும் அதே நேரத்தில் மலிவு விலையிலும் கிடைக்கின்றன. அதிலும் முக்கியமாக ஏசரின் லேப்டாப்புகள் 100க்கு 100 விலையிலும் தரத்திலும் சிறந்ததாக இருக்கின்றன.
அந்த வரிசையில் ஏசரின் புதிய அஸ்பையர் 5733 உண்மையாகவே மக்களின் மனங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என நம்பலாம். இந்த புதிய லேப்டாப் 15.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு 1366 X 768 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. இது 2ஜி ப்ராசஸர் இன்டல் கோர் ஐ3-370எம் கொண்டுள்ளது.
அதனால் இதன் வேகம் அமர்க்களமாக இருக்கும். மேலும் இது லினுக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளது. க்ராபிக்ஸ் வசதிகளுக்காக இன்டல் எச்டி க்ராபிக்ஸ் வசதியையும் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளேயில் வரும் படங்கள் மற்றும் காட்சிகள் மிக தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கும். மேலும் இது டிவிடி ட்ரைவ் கொண்டருக்கிறது. அதோடு இதனுடய 200ஜிபி எச்டிடியுடன் கூடிய 2ஜிபி டிடிஆர்3 ராம் இதன் முக்கிய சிறப்பு ஆகும்.
தகவல் பரிமாற்ற வசதியைப் பொருத்தமட்டில் இது வைபை மற்றும் ப்ளூடூத் கொண்டுள்ளதால் மற்ற ஹார்வேர்களுடன் எளிதாக பைல்களை பரிமாற்றம் செய்ய முடியும். மேலும் இது விஜிஎ, எல்எஎன் மற்றும் யுஎஸ்பி போன்ற வசதிகளையும் வழங்குகிறது. மேலும் இது எச்டிஎம்ஐ போர்ட் கொண்டுள்ளதால் இதன் திரையில் உள்ள காட்சிகளை பெரிதாக்கி நாம் பார்க்கலாம்.
இந்த ஏசர் 5733 லேப்டாப் ரூ.23,500க்கு விரைவில் இந்தியாவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications