ஏசர் அறிமுகப்படுத்தும் அசத்தலான ஸ்விஃப்ட் 7 லேப்டாப்.!

By Prakash
|

ஏசர் நிறுவனம் தற்சமயம் உலகின் மெல்லிய லேப்டாப் மாடலை CES 2018-இல் அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி ஸ்விஃப்ட் 7 சாதனத்தை பயனர்கள் எங்கு வேண்டுமானாலும் சுலபமாக எடுத்துச்செல்லலாம்.

கலர் இண்டெலிஜென்ஸ், கார்னிங் கொரில்லா கண்ணாடி என்பிடி, தொடுதிரை போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த ஸ்விஃப்ட் 7 லேப்டாப் மாடல். இவற்றில் உள்ள பேக்லைட் கீபோர்டு விமானம் அல்லது ரயில் பயணங்கள் போன்ற குறைந்த ஒளி நிலைகளில் பயனுள்ளதாக இருக்கும்.

ஏசர் ஸ்விஃப்ட் 7 :

ஏசர் ஸ்விஃப்ட் 7 :

ஏசர் ஸ்விஃப்ட் 7 சக்தி வாய்ந்த 7 வது ஜென் இன்டெல் கோர் ஐ7 செயலி மூலம் இயக்கப்படுகிறது, அதன்பின்பு 8 ஜிபி LPDDR3 நினைவகம் மற்றும் 256ஜிபி PCIe SSD சேமிப்பு வழங்குகிறது.

விண்டோஸ் 10:

விண்டோஸ் 10:

இந்த ஏசர் ஸ்விஃப்ட் 7 லேப்டாப் சாதனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு இந்த லேப்டாப் மாடல் 10மணி நேரம் பேட்டரி ஆயுள் வழங்குவதாகக் கூறப்படுகிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 14-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ்5 டிஸ்பிளே இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யூனிபாடி
வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த லேப்டாப் மாடல்.

நானோ சிம் :

நானோ சிம் :

ஏசர் ஸ்விஃப்ட் 7 இன்டெல் எகஸ்எம்எம் 4ஜி எல்டிஇ இணைப்பு, நானோ சிம் கார்டு ஸ்லாட் ஆதரவு மற்றும் இ-சிம் தொழில்நுட்பம் ஆகியவை இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் சுயவிவரங்களைப் பதிவிறக்க மற்றும் செயல்படுத்துவதற்கு பயனர்களை அனுமதிக்கிறது. கூடுதல் பாதுகாப்புக்கான கைரேகை ரீடர் இவற்றில் உள்ளது.

ஜெர்ரி:

ஜெர்ரி:

ஏசர் நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைவர் ஜெர்ரி கவோ தெரிவித்தது என்னவென்றால் உலகின் மிக மெல்லிய லேப்டாப் என்றப் பெயரைப் பெற்றுள்ளது
இந்த ஸ்விஃப்ட் 7 லேப்டாப், மேலும் ஸ்விஃப்ட் 7 ஒரு மெல்லிய சேஸ், சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பம் போன்றவை இவற்றுள்
இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

விலை:

விலை:

இந்த லேப்டாப் சாதனத்தின் விலை மதிப்பு பொறுத்தவரை 1,699டாலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்திய விலை மதிப்பில்
ரூ.1,07,470-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Acer announces Swift 7 at CES 2018 worlds thinnest laptop ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X