ஜெல்லி பீன் இயங்குதளத்தில் ஏசர் ஐகானியா டேப்லெட்!

ஏசர் நிறுவனம் எ110 ஐகோனியா என்ற ஒரு புதிய டேப்லெட்டை இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அறிமுகம் செய்திருந்தது. மேலும் இந்த புதிய டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்குதளத்தில் வருவதாக இருந்தது. ஆனால் இன்ப அதிர்ச்சி தரும் வகையில் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வர இருப்பதாக இங்கிலாந்தில் உள்ள ஒரு பிரபல இணையதளம் அறிவித்திருக்கிறது.
இந்த செய்தி உண்மையாக இருக்குமானால் கூகுள் நெக்சஸ் 7 டேப்லெட்டிற்குப்பின் ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் இயங்கும் டேப்லெட் இந்த எ110 ஐகோனியாவாகத்தான் இருக்கும். ஏனெனில் ஜெல்லி பீன் இயங்குதளத்தில் வரும் முதல் டேப்லெட் கூகுள் நெக்சஸ் 7 ஆகும்.
இந்த ஏசரின் புதிய டேப்லெட் சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வர காத்திருக்கிறது. குறிப்பாக இதன் 7 இன்ச் எல்சிடி தொடுதிரை மிகத் தெளிவாக இருக்கும். அதோடு இந்த டேப்லெட்டில் 1.2 ஜஹெர்ட்ஸ் என்விடியா டேக்ரா 3 ப்ராசஸர் இருப்பதால் இது தாறுமான வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம். அதோடு இந்த டேப்லெட் பலதரப்பட்ட வேலைகளையும் மிக எளிதில் செய்து முடிக்கும்.
இந்த டேப்லெட்டில் எசிடிஎம்ஐ போர்ட் உள்ளதால் இந்த டேப்லெட்டை டிவி போன்ற பெரிய திரைகளில் மிக எளிதாக இணைக்க முடியும். மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரியுடன் இந்த டேப்லெட் வருகிறது. இதன் மெமரியை எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை அதிகரிக்க முடியும்.
மேலும் இந்த டேப்லெட் கூகுளின் சேவைகளைத் தாங்கி வருகிறது. அதாவது ஜிமெயில், கூகுள்+, மேப்புகள், மெசஞ்சர், ப்ளேஸ்டோர், டாக், யுடியூப் போன்ற கூகுளின் சேவைகளையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறது.
ஜெல்லி பீன் இயங்கு தளத்தி்ல் இந்த டேப்லெட் வருவதால் இந்த டேப்லெட்டில் போட்டோ எடிட்டிங்கை மிக அழகாக செய்யலாம். இணைப்பு வசதிக்காக இந்த டேப்லெட் மைக்ரோ யுஎஸ்பியை வழங்குகிறது. மேலும் இந்த டேப்லெட்டில் மவுஸ் மற்றும் கீபோர்டு மற்றும் கேம் பேடுகளையும் இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் இந்த டேப்லெட்டில் எச்டி வீடியோ பதிவு வசதியும் உள்ளது. இதன் பேட்டரி நீடித்த இயங்கு நேரத்தை வழங்கும். இந்த டேப்லெட் ரூ.15,800க்கு விற்கப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications