Home
Computer

ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப்புக்கு ஈடு கொடுக்குமா ஏசர் அல்டராபுக்?

By Super

 ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப்புக்கு ஈடு கொடுக்குமா ஏசர் அல்டராபுக்?
சிறிய, அடக்கமான மற்றும் மெல்லிய லேப்டாப்புகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்திருக்கிறது. அப்படிப்பட்ட லேப்டாப் என்றாலே சட்டென்று அவர்களின் நினைவுக்கு வருவது ஆப்பிளின் மேக்புக் ஏர் லேப்டாப் ஆகும். ஆனால் அதன் விலை அதிகமாக இருப்பதால் பலரால் அதை விலை கொடுத்த வாங்க முடிவதில்லை.

இதை மனதில் வைத்து ஏசர் நிறுவனம் ஆப்பிளின் ஏர் லேப்டாப்பை விட குறைந்த விலையில் அதே போல் செயல் திறனில் சிறிதும் குறைபடாத புதிய அல்டராபுக்கை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய அல்டராபுக் ஆப்பிள் லேப்டாப்புக்க்கு மிகப் பெரிய சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய அல்ட்ராபுக்கின் திரை 15 இன்ச்சாக இருக்கும் என்று தெரிகிறது.

சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஏசர் நிறுவனம் தாம் குறைந்த விலையில் அதே நேரத்தில் தரமான அல்ட்ரா புக்குகளை அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. மேலும் ஏசரின் புதிய லேப்டாப்பின் திட்டங்களைப் பற்றி ஏராளமான வதந்திகளும் வருகின்றன. ஆனால் இந்த புதிய அல்ட்ராபுக்கின் சிறப்புகளைப் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவரவில்லை.

இந்த புதிய அல்ராபுக் மக்களை எளிதில் சென்று சேரும் என நம்பப்படுகிறது. இது பெரிய திரையுடன் வந்தாலும் இதை எளிதில் நமது பாக்கட்டில் வைத்துச் செல்லலாம். மேலும் இது கார்பரேட் தேவைகளையும் நிறைவு செய்யும் விதத்தில் வரும். இந்த புதிய அல்ட்ராபுக்கிற்கு போட்டி போடக்கூடியதாக சாம்சங்கின் 14 இன்ச் வரிசை 5 மாடல் டிவைஸ் மட்டுமே இருக்கும் என நம்பப்படுகிறது. இதன் விலை ரூ.50,000மாக இருக்கிறது.

ஆனால் ஏசரின் புதிய டிவைஸ் ரூ.40000க்குள் இருக்கும். மேலும் இந்த புதிய டிவைஸ் லாஸ் வேகாஸ் நகரில் வரும் ஜனவரி 10 முதல் 13 வரை நடைபெறும் நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. கண்டிப்பாக கணினி உலகில் புதிய புரட்சியை இந்த ஏசர் டிவைஸ் ஏற்படுத்தும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X