அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் ஆகாஷ்-2 டேப்லெட்!

உலகின் மிக மலிவு விலை டேப்லெட்டான ஆகாஷ்-2 வரும் மே மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
மேம்பட்ட அளவில் வரும் இந்த புதிய டேப்லெட் மிகவும் சூப்பராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் இந்த டேப்லெட் 700 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசஸர், 3 மணி நேர இயங்கு நேரம், கப்பாசிட்டி திரை ஆகிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்த ஆகாஷ் டேப்லெட்டுக்கு ஆகாஷ் 2 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
தரமான டேப்லெட்டை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக இந்திய அரசு இந்த ஆகாஷ் டேப்லெட்டின் மேம்படுத்தப்பட்ட வெர்சனை வழங்குகிறது என்ற அமைச்சர் கபில் சிபல் கூறுயுள்ளார். மேலும் இந்த புதிய ஆகாஷ் 2 டேப்லெட் இன்னும் பல முறை பரிசோதனை செய்யப்படும். இந்த புதிய ஆகாஷ் 2 டேப்லெட் விற்பனைக்கு வரும் என்று கூறுகிறார்.
மாணவர்களுக்கு தொழில் நுட்பத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்திய அரசு இந்த ஆகாஷ் 2 டேப்லெட்டை ரூ.1200க்கு வழங்க இருக்கிறது. முதலில் இந்த டேப்லெட்டை டேட்டா விண்ட் நிறுவனம் தயாரித்தது. ஆனால் அது அந்த அளவிற்கு தரமாக இல்லை. ஆனால் இப்போது வரும் புதிய டேப்லெட் கண்டிப்பாக சிறப்பாக வரும் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications