ஆகஸ்டு மாதம் வெளியாகும் ஆகாஷ்-2!

By Super
|

ஆகஸ்டு மாதம் வெளியாகும் ஆகாஷ்-2!
குறைந்த விலையில் புதிய ஆகாஷ் டேப்லட்டினை வழங்குவதாக தகவல்களை கேட்டிருப்போம். இதை தொடர்ந்து ஆகாஷ் டேப்லட் தரமான தொழில் நுட்பங்களை கொண்டதாக இல்லை என்று பல புகார்களும் வெளியானது. இதனால் புதிதாக ஆகாஷ்-2 டேப்லட் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆகாஷ்-2 டேப்லட், ஆகாஷ் டேப்லட்டின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இருக்கும். ஆகாஷ்-2 டேப்லட் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும்.

இதனால் கூடுதல் தொழில் நுட்ப வசதிகளையும் பெற முடியும். 7 இஞ்ச் திரையினை வழங்கும் இந்த டேப்லட், 800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸரினை கொண்டதாக இருக்கும்.

256 எம்பி ரேம் வசதியினையும், 2 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினையும் பெறலாம். இதன் லித்தியம் பாலிமர் 3,200 எம்ஏஎச் பேட்டரி, நிறைய தொழில் நுட்பங்களை பயன்படுத்த சிறந்த வகையில் ஒத்துழைக்கும்.

ஆகாஷ்-2 டேப்லட் சமீபத்தில் ஐஐடி மும்பை மற்றும் டேட்டாவின்டு மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த டேப்லட் ரூ. 2,263 விலை கொண்டதாக இருக்கும். இந்த புதிய ஆகாஷ்-2 டேப்லட் வருகிற ஆகஸ்டு மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X