Home
Computer

உலக கேட்ஜெட் கண்காட்சியில் அறிமுகமாகும் புதிய ஆசஸ் டேப்லட்

By Karthikeyan
உலக கேட்ஜெட் கண்காட்சியில் அறிமுகமாகும் புதிய ஆசஸ் டேப்லட்

அடுத்த வாரம் நடைபெறும் உலக மொபைல்போன் கண்காட்சிக்கு இப்போதே முன்னனி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளோடு வரிந்து கட்டிக்கொண்டு தயாராக இருக்கின்றன. அதிலும் முக்கியமாக டேப்லெட் தயாரிப்பில் கரைகண்ட ஆசஸ் தனது புதிய டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது.

இந்த புதிய டேப்லெட்டின் பெயர் ஆசஸ் டிஎப்300டி ஆகும். இந்த டேப்லெட்டின் படங்கள் சமீபத்தில் தான் இணையதளங்களில் வெளியிடப்பட்டன.

இந்த வருடம் ஜனவரியில் நடைபெற்ற நுகர்வோர் கண்காட்சியில் ஆசஸ் தமது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து இப்போது தனது புதிய டேப்லெட்டுடன் உலக மொபைல்போன் கண்காட்சியை வரவேற்க இருக்கிறது.

இந்த புதிய டிஎப்300டி டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் அவை கண்டிப்பாக பிரமிப்பாக இருக்கும். அதாவது இந்த புதிய டேப்லெட் 10 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே 1280 x 800 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது.

அடுத்ததாக இதன் ப்ராசஸரைப் பார்த்தால் இந்த டேப்லெட் 1.2 ஜிஹெர்ட்ஸ் கொண்ட டேக்ரா 3 ப்ராசஸரைக் கொண்டுள்ளது. இதன் மெமரி சேமிப்பு 16ஜிபி ஆகும். மேலும் இந்த டேப்லெட் 640 கிராம் எடையையும் அதே நேரத்தில் 9.9 தடிமனையும் கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டின் பேட்டரி 8.5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இதில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் தரமான வீடியோவும் உண்டு.

இதற்கு முன் ஆசஸ் களமிறக்கிய ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் டேப்லெட் பல ஏராளமான பிரச்சினைகளைச் சந்தித்ததால ஒரு சில சில்லறை வர்த்தகர்கள் அந்த டேப்லெட்டின் விற்பனையை நிறுத்தி வைத்தனர். ஆனால் வரும் இந்த புதிய டிஎப்200டி டேப்லெட் ப்ரைம் டேப்லெட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் களைந்து மிகத் தரமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் சற்று குறைந்த விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X