ப்ளாஷ் இல்லாமல் துல்லியமாக படம் எடுக்கும் புதிய டிஜிட்டல் கேமரா!

Posted By: Karthikeyan
ப்ளாஷ் இல்லாமல் துல்லியமாக படம் எடுக்கும் புதிய டிஜிட்டல் கேமரா!

கெட்ஜெட் உலகிற்கு இந்த புத்தாண்டு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என கூற முடியும். ஏனெனில் இந்த புதிய ஆண்டு மட்டும் ஏராளமான நிறுவனங்களிடமிருந்து ஏராளமான வசதிகளுடன் ஏராளமான கெட்ஜெட்டுகள் வரவிருக்கின்றன. அவற்றில் முக்கியமான கெட்ஜெட் லிட்ரோ டிஜிட்டல்கேமரா ஆகும். இந்த கேமரா கூல் தொழில் நுட்பத்துடன் வருகிறது.

இந்த லிட்ரோ டிஜிட்டல் கேமராவை கிளிக் செய்தால் போது அது மிக அழகாக படம் எடுக்கும். இதில் எடுக்கும் படங்களை கணினி மூலம் இன்னும் மெருகு ஏற்ற முடியும். புகைப் படம் எடுப்பவர்களும் இந்த கேமரா மூலம் தமக்கு வேண்டிய பகுதிகளை முக்கியப்படுத்தி மிக அழகாக துல்லியமாக படம் எடுக்க முடியும்.

லிட்ரோவின் கிரா வாம்லர் கூறும் போது இந்த லிட்ரோ டிஜிட்டல் கேமரா மற்ற கன்வென்சனல் கேமராக்களை விட மிக அருமையாக இருக்கும் என்கிறார். இந்த கேமரா ஒரு லைட்பீல்டு கேமரா ஆகும்.

இந்த கேமராவின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கும் போது இதை மிக எளிதாகப் பயன்படுத்தலாம். மேலும் இது ஒரு தனித்துவம் வாய்ந்த ஒன்று. மேலும் இது ஒரு அடக்கமான கேமரா ஆகும். இதன் டிசைனும் மிக அற்புதமாக உள்ளது. இந்த கேமராவில் 8எக்ஸ் ஆப்டிக்கல் சூம் உள்ளது. இதில் ஷட்டர் மற்றும் பவர் என்ற இரண்டு பட்டன்கள் மட்டுமே உள்ளன.

இதில் உள்ள இன்டியூட்டிவ் க்ளாஸ் தொடுதிரை மூலம் கேமராவை நேரடியாக போக்கஸ் செய்ய முடியும். இதில் வரும் படம் எச்டி தரத்துடன் இருக்கும். மேலும் இந்த கேமராவை மிக வேகமாக இயக்க முடியும். இதில் உள்ள நவீன மற்றும் புதுமையான லைட்பீல்டு உள்ளதால் இது 11 மில்லியம் லைட் அலைகளை பிடிக்கக்கூடிய சக்தி கொண்டிருக்கிறது.

ப்ளாஷ் இல்லாமலே வெளிச்சமான இடத்திலும் மற்றும் இருட்டான இடத்திலும் மிகத் தெளிவான படங்களைப் சுட்டுத் தள்ளிவிடும். இந்த கேமராவின் 8 ஜிபி மாடல்களில் 350 படங்களையும், 16 ஜிபி மாடல்களில் 750 படங்களையும் சேமித்து வைக்க முடியும்.

இந்த லிட்ரோ கேமராவில் லிட்ரோவின் டெஸ்டாப் அப்ளிகேசன்களும் உள்ளன. இதன் மூலம் இலவசமாக சாப்ட்வேர்களை பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால் இந்த அப்ளிகேசன் தற்போது மேக் ஒஸ் எக்ஸில் மட்டுமே மிக நன்றாக வேலை செய்கிறது. இந்த அப்ளிகேசன் படங்களை எடுப்பதற்கும், எடிட் செய்வதற்கும் மற்றும் அனுப்புவதற்கும் உதவுகிறது.

8ஜிபி கொண்ட லிட்ரோ கேமரா ரூ.21,000க்கும், 16ஜிபி கொண்ட கேமரா ரூ.25,000க்கும் விற்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot