டேப்லெட்டுகளுக்கான புதிய ஜாய்ஸ்டிக் கேம்பேட்!

Posted By: Karthikeyan
டேப்லெட்டுகளுக்கான புதிய ஜாய்ஸ்டிக் கேம்பேட்!

அக்சஸரிகளை வழங்கும் 60 பீட் நிறுவனம் இப்போது ஒரு ஜாய்ஸ்டிக் அடிப்படையில் அமைந்த ஐஒஎஸ் டிவைஸ்களுக்கான ஒரு கேம்பேடை அறிமுகப்படுத்துகிறது. ஐஒஸ்ஸூடன் கூடிய இந்த கேமிங் வீடியோ கேமை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்லும் என நம்பலாம். இந்த புதிய ஜாய்ஸ்டிக் கேம்பேட் வீடியோ கேம் பிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என்பது உறுதி.

எதற்காக இந்த நவீன கேம்பேடு வருகிறது என்றால் ஒரு எளிமையான பதில்தான் இருக்க முடியும். அதாவது இப்போது உள்ள டேப்லெட்டுகள், ஐபோடுகள் மற்றும் ஐபோன்கள் வீடியோ கேம்களை வழங்கினாலும் ரசிகர்களின் வேகத்திற்கு அவற்றால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதை மனதில் வைத்துதான் இந்த முற்றிலும் மாறுபட்ட மற்றும் நவீன கேமிங்பேட் வருகிறது.

அதாவது ஒரு டிவைசில் வீடியோகேம் தரமாக இல்லை என்றால் அந்த டிவைஸ் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமான ஒன்றை இழக்கிறது என்று அர்த்தம். இதை நிறைவு செய்வதற்காக ஐஒஎஸ் டிவைஸ்களில் இந்த ஜாய்ஸ்டிக் கேம்பேட் 60 பீட் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

இந்த கேம்பேடில் மொத்தம் 10 பட்டன்கள் மற்றும் ஓரு டி பேட் உள்ளன. இந்த கேம்பேட் அடிப்படையில் ஒரு டூவல் அனலாக் ஜாய்ஸ்டிக் அடிப்படையில் அமைந்த ஒன்றாகும். இதை ஐஒஎஸ் டிவைஸ்களில் இணைத்தால் வீடியோ கேம் ஆரம்பித்துவிடும்.

மேலும் இந்த கேம்பேட் பவர் யூனிட் அல்லது பேட்டரிகள் ஆகியவற்றைக் கொண்டிராததால் மிக குறைந்த எடையில் இருக்கும். அதனால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். மேலும் இந்த கேம்பேடை 3.5 மிமீ ஆடியோ ஜாக் வழியாக ஐஒஎஸ் டிவைஸ்களில் மிக எளிதாக இணைக்க முடியும்.

இந்த கேம்பேட் அமெரிக்கச் சந்தையில் 49.99 டாலருக்கு விற்கப்படுகிறது. இந்தியாவிற்கு வரும்போது இது ரூ.3500க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot