ஒளி ஊடுருவும் சாம்சங் 'கிளாஸ் பேப்பர்' டேப்லெட்!

Posted By: Staff
ஒளி ஊடுருவும் சாம்சங் 'கிளாஸ் பேப்பர்' டேப்லெட்!
ஒளி ஊடுருவும் தொழில்நுட்பம் கொண்ட திரை மற்றும் மடக்கி விரிக்கும் வசதியுடன் புதிய டேப்லெட்டை சாம்சங் வடிவமைத்து வருகிறது. இந்த புதிய டேப்லெட்டின் கான்செப்ட் மாடலை அந்த நிறுவனம் சமீபத்தில் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது.

மின்னணு சாதன தயாரிப்பில் சாம்சங் முன்னிலை வகிக்கிறது. குறி்ப்பாக, டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சாம்சங் தயாரிப்புகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இந்த நிலையில், தனது தொழில்நுட்ப வலிமையை உலகுக்கு பரைசாற்றும் விதமாக புதிய டேப்லெட்டை சாம்சங் வடிவமைத்து வருகிறது.

ஹாலிவுட் சினிமாக்களில் காட்டப்படும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட கம்ப்யூட்டர்கள் போன்று  நிஜத்தில் புதிய டேப்லெட்டை சாம்சங் வடிவைத்து வருகிறது. இந்த டேப்லெட்டின் திரையை மடக்கி விரிக்கலாம். மேலும், இந்த திரை ஹாலோகிராம் தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதால் 3டி வசதியில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கலாம்.

இந்த புதிய டேப்லெட் பார்ப்பதற்கு ஒரு கிளாஸ் பேப்பர் போன்றுதான் இருக்கிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த புதிய கான்செப்ட் டேப்லெட் சிறப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்த புதிய டேப்லெட் மார்க்கெட்டிற்கு வரும்போது பெரும் வரவேற்பை பெறும் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot