விக்கிபேட் வழங்கும் புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்!

Posted By: Karthikeyan
விக்கிபேட் வழங்கும் புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்!

விக்கிபேட் நிறுவனம் ஒரு புதிய ஆன்ட்ராய்டு கேமிங் டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது. இந்த கேமிங் டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 வெர்சன் இயங்கு தளத்தைக் கொண்டிருக்கும். இது எப்போது விற்பனைக்கு வரும் என்று தெரியவில்லை என்றாலும் விரைவில் உலக சந்தையில் இந்த டேப்லெட்டை பார்க்கலாம். இந்த டேப்லெட் கைகையின் லைவ் ஸ்ட்ரீமிங் சேவைகளுடன் வருகிறது.

முதலில் இந்த டேப்லெட் 8.1 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வரும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது இந்த டேப்லெட் 10.1 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வர இருக்கிறது. அதனால் இதன் ரிசலூசன் சூப்பராக இருக்கும். மேலும் இது குறைந்த எடையுடன் கையடக்க அளவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டேப்லெட் க்வாட் கோர் ப்ராசஸருடன் 3ஜி வசதியுடன் வரும் என்றும் நம்பப்படுகிறது.

இந்த டேப்லெட்டில் உயர் டெபினிசன் கொண்ட க்ராபிக்ஸ் வசதிகளும் உண்டு. அதுபோல் கேமிங் சாதனங்களில் இருக்கும் டூவல் அனலாக் ஸ்டிக்குகளும் இந்த டேப்லெட்டில் உண்டு. அதனால் இதில் சூப்பராக வீடியோ கேம்களை விளையாட முடியும். அதுபோல் இதில் வைபை வசதியும் உள்ளதால் இதன் மூலம் எச்டிடிவி மற்றும் டிவியில் இந்த டேப்லெட்டை இணைத்து அருமையாக பெரிய திரையில் வீடியோ கேம்களை விளையாட முடியும். மேலும் டி பேட் மற்றும் வீடியோ கேம் பட்டன்களையும் இந்த டேப்லெட் அம்சமாக கொண்டிருக்கிறது.

ஆகவே இதை ஒரு முழுமையான கேமிங் டேப்லெட் என்று அழைக்கலாம். மேலும் இந்த டேப்லெட் பின்பக்கம் மற்றும் முன்பக்கம் என இரண்டு கேமராக்களைக் கொண்டிருக்கிறது. அதோடு இதில் 1080 எச்டி வீடியோ சப்போர்ட்டிங் வசதியும் உண்டு. இந்த டேப்லெட் 8ஜிபி சேமிப்பு வசதி கொண்டிருப்பதால் ஏராளமான கேம்களை இதில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு உள்ளதால் இதன் சேமிப்பை விரிவுபடுத்தவும் முடியும்.

இந்த டேப்லெட் கைகை க்ளவ் தளம் கொண்டிருப்பதால் இந்த டேப்லெட்டில் வீடியோ கேம் விளையாடுவதற்கு மிக சூப்பராக இருக்கும். இந்த டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இது விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்