Home
Computer

'கேட்வே' லேப்டாப்...நவீன தொழில்நுட்பங்களின் நுழைவாயில்!

By Super

'கேட்வே' லேப்டாப்...நவீன தொழில்நுட்பங்களின் நுழைவாயில்!
கேட்வே ஐடி47எச்07யு என்ற குறியீட்டு பெயரில் புதிய லேப்டாப்பின் மூலம் லேப்டாப் சந்தையை புரட்டிப் போடவிருக்கிறது கேட்வே நிறுவனம். இந்த ஐடி47எச்07யு லேப்டாப் அலுமினியத் தகடால் பேனல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது 14 இன்ச் டிஸ்ப்ளேயை கொண்டிருக்கிறது. இது குறைவான எடையைக் கொண்டிருக்காவிட்டாலும் அல்ட்ரா போர்ட்டபுள் லேப்டாப்பாக கருதப்படுகிறது.

கேட்வே ஐடி47எச்07யு லேப்டாப்பின் பெர்ஃபார்மென்சில் சிறப்பாக இருப்பதாக பெயர் வாங்கியுள்ளன. இது இயங்குதளம் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் சாப்ட்வேரில் இயங்கும். இதன் 14 இன்ச் க்ளாசி ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஎப்டி கலர் டபுள்யுஎக்ஸ்ஜிஎ டிஸ்ப்ளே 1366 x 768 பிக்சல் ரிசலூசனையும் வழங்குகிறது. இது எல்இடி பேக்கலிட் திரை தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

இந்த கேட்வே லேப்டாப்பின் பிராசஸர் 2.4 ஜிஹெர்ட்ஸ் கோர் ஐ5 ஆகும். இந்த பிராசஸர் 2 கோர்ஸ் மற்றும் 3 எம்பி எல்3 கேச் இன்டல் எச்எம்65 எக்ஸ்ப்ரஸ் சிப்செட்டைக் கொண்டுள்ளது. இதன் சேமிப்பு அளவு 500 ஜிபி எஸ்எடிஎ எச்டிடி ஆகும். இது ப்ளூடூத் 2.1 வெர்ஷனை கொண்டிருக்கிறது.

அதிவேக வைபை 802.11 பி/ஜி/என் இணைப்பையும் வழங்குகிறது. மேலும் 1000எம்பிபிஎஸ் லேன் இணைப்பு இதன் வேகத்தை பல மடங்கு அதிகரிக்கும். யுஎஸ்பி போர்ட்டுகளைப் பார்த்தால் இது 2 யுஎஸ்பி போர்ட் வி2.0 மற்றும் 1 யுஎஸ்பி வி3.0 ஸ்லாட்டையும் கொண்டுள்ளது.

மற்ற சிறப்புகளைப் பார்த்தால் எச்டிசிபி சேவையுடன் எடிஎம்ஐ ஸ்லாட்டை வழங்குகிறது. மேலும் எக்ஸ்டி பிக்சர் கார்டு, தரமான வெப்காம், மைக்ரோபோன், ஆர்ஜே 45 நெட்வொர்க் போர்ட் மற்றும் 8 மணி நேர பேக்கப் கொண்ட 6000எம்ஏஎச் கொண்ட லயன் 6 செல் பேட்டரியும் இந்த லேப்டாப்பின் முக்கிய சிறப்புகளாக கூறலாம்.

கார்டு ரீடர் மற்றும் மெமரி ஸ்டிக் பிஆர்ஒ, எக்டி பிக்சர் கார்டு, எம்எம்சி 3.0மிமீ ஆடியோ அவுட் ஆகியவையும் இதில் அடங்கும். இதன் மொத்த பரப்பைப் பார்த்தால் அது 13 x 1.1 x 8.9 இன்சுகளாகும். இது 2 எடை கிலோ கொண்டது.

இவ்வாறாக ஏராளமான சிறப்புகளை இந்த கேட்வே லேப்டாப் வழங்கினாலும் இதில் சில குறைபாடுகள் உள்ளன. அதாவது குறைந்த ஜிபியு சப்போர்ட், ப்ளூரே சப்போர்ட் இல்லாமை, சற்று தடிமனான உருவம் குறைபாடுகளாக கூறலாம்.

இதேபோன்று, சிறிய டச்பேட் மற்றும் நேராகவே மட்டும் பார்க்கக்கூடிய டிஸ்ப்ளே வசதி மற்றும் சோஷியல் நெட்வொர்கிங் இல்லாத ஓஎஸ் ஆகியவை ஆகும். ஆனால் இந்த குறைபாடுகள் இந்த லேப்டாப்பில் குறைகளாகவே தெரியாது. ஏனெனில் இதன் நிறைகள் ஏராளமாக இருக்கிறது. அதுபோல் இதன் ஸ்பீக்கரும் மிக அருமையாக இருப்பதால் அது அலாதியான இசையை வழங்கும். இந்த கேட்வே லேப்டாப்பின் விலை ரூ.35,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X