ட்ரான்பார்மர் ப்ரைம் டேப்லெட் குறைபாடுகளை சரி செய்யுமா ஆசஸ்?

Posted By: Karthikeyan
ட்ரான்பார்மர் ப்ரைம் டேப்லெட் குறைபாடுகளை சரி செய்யுமா ஆசஸ்?

இந்த வருடம் லாஸ் வேகாஸில் நடந்த நுகர்வோர் மின்னனு கண்காட்சியில் ஆசஸ் நிறுவனம் பல டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் இந்த வருடம் இன்னும் பல டேப்லெட்டுகளை ஆசஸ் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது. சமீபத்தில் வந்திருக்கும் செய்தி என்னவென்றால் தனது ட்ரான்ஸ்பார்மர் ப்ரைமுக்கு அடுத்தபடியாக வரும் புதிய டேப்லெட்டைத் தயாரிப்பதில் ஆசஸ் தீவிரமாக இறங்கி இருக்கிறது என்பதாகும். இந்த தகவலை தைவானைச் சேர்ந்த ஒரு இணைய தளம் வெளயிட்டிருக்கிறது.

ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைமில் ஒரு சில குறைபாடுகள் இருந்ததால் அதன் விற்பனை கடுமையாகப் பாதித்தது. மேலும் ஒரு சில சில்லறை வரத்தகர்கள் அதன் விற்பனையை முழுவதுமாக நிறுத்தி வைத்திருக்கின்றனர். மேலும் இந்த குறைபாடுகள் விரைவாக களையப்பட்டு மேம்படுத்தப்பட்ட புதிய டேப்லெட் வரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இந்த புதிய சாதனத்தின் பெயர் டிஎப்300டி என்று தெரிகிறது. அதாவது இது ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைமின் வாரிசாக வரும் என்று தெரிகிறது. இந்த டேப்லெட்டைப் பற்றி அதிகமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால் இந்த டேப்லெட்டின் படங்களைப் பார்க்கும் போது அது ஒரிஜினல் ட்ரான்ஸ்பார்மரைப் போலவே தோன்றுகிறது. இதில் முகப்பு கேமரா இல்லை. ஆனால் பின்பக்கம் நடு உச்சியில் கேமரா உள்ளது. மேலும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் பவர் பட்டன் போன்றவையும் இந்த படங்களில் தெரிகிறது.

மேலும் இந்த புதிய டேப்லெட் க்வாட் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மேலும் இதன் பேனல் சிவப்பு நிறத்தில் ப்ளாஸ்டிக்கில் இருக்கிறது. அதனால் இதன் விலை சற்று குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. அவ்வாறு குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த டேப்லெட் க்வாட் கோர் ப்ராசஸருக்குப் பதிலாக டூவல் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

இந்த டேப்லெட்டின் விலை பற்றிய தகவல் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் இதன் அறிவிப்பு வரும் சர்வதேச மொபைல் கண்காட்சியில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்