அகன்ற திரையுடன் புதிய எச்பி கம்ப்யூட்டர்!

Posted By: Karthikeyan
அகன்ற திரையுடன் புதிய எச்பி கம்ப்யூட்டர்!

எச்பி நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய மேசைக் கணினியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய கணினிக்கு எச்பி ஓம்னி27 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது ஒரு பெரிய மேசை கணினியாகும்.

இந்த மேசைக் கணினி 1920×1080 பிக்சல் ரிசலூசன் கொண்ட 27 இன்ச் எல்சிடி திரையைக் கொண்டிருக்கிறது. இதன் எடை 35 பவுண்டுகளாகும். இந்த கணினி விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதோடு இன்டல் கோர் ஐ8 ப்ராசஸர், 8ஜிபி ரேம், 1டிபி ஹார்ட் ட்ரைவ், இன்டல் க்ராபிக்ஸ் மற்றும் பெகட்ரான் கார்பரேசன் 2எசி3 மதர்போர்ட் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இதன் மெமரி 8.00 ஜிபி டிடிஆர்3 எஸ்டிரேம் 666 மெகா ஹெர்ட்ஸ் ஆகும்.

இந்த ஓம்னி கணினி இணைப்பு வசதிகளுக்காக கார்டு ரீடர், 2 யுஎஸ்பி 3.0 போர்ட்டுகள், எர்த்நெட், பீட்சின் தரச்சான்றிதழ் பெற்ற ஹெட்போன் போர்ட், மைக்ரோபோன் இன் போர்ட், 4 யுஎஸ்பி 2.0 போர்ட்டுகள் மற்றும் டிஜிட்டல் ஆடியோ போன்ற சூப்பரான தொழில் நுட்பங்களை கொண்டிருக்கிறது.

மேலும் இந்த கணினியில் டிவி ட்யூனர் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட்டும் உண்டு. இதில் வயர்லஸ் கீபோர்டு மற்றும் மவுசையும் பயன்படுத்தலாம். அதோடு எச்பி லிங்க்அப் வியூவர் வசதியும் இந்த கணினியில் உள்ளது. மேலும் இதில் உள்ள மேஜிக் கேன்வாஸ் தொழில் நுட்பம் இந்த கணினிக்கு கூடுதல் பெருமை சேர்க்கும்.

இந்த மேசைக் கணினி சூப்பரான பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டிருக்கிறது. அதாவது ஆடியோ, வீடியோ மற்றும் கேமிங் அனுபவங்களை நிறைவாக இந்த கணினியில் பெற முடியும்.

இந்த மேசைக் கணினியின் விலை ரூ.70000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot