Home
Computer

சாம்சங் அல்ட்ரா போர்ட்டபிள் லேப்டாப்!

By Super

சாம்சங் அல்ட்ரா போர்ட்டபிள் லேப்டாப்!
அல்ட்ரா போர்ட்டபுள் லேப்டாப்புகளின் ஆரம்பம் என்று பார்த்தால் அது ஆப்பிளின் மேக்புக் ஏர் 13 லேப்டாப்பாகும். இதனைத் தொடர்ந்து தற்போது சாம்சங் சீரிஸ் 9 வரிசையில் புதிய அல்ட்ரா போர்ட்டபுள் லேப்டாப்புகளை சாம்சங் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

குறைந்த தடிமன் கொண்ட இந்த லேப்டாப் சாம்சங் சீரிஸ் 9 900X3எ-பிஒ1 என்ற பெயரில் வந்துள்ளது. இதன் எடை 2.88 பவுண்டுகள் மட்டுமே. இதன் தடிமனும் 0.6 இன்ச் மட்டுமே. இந்த 13.3 இன்ச் அல்ட்ரா போர்ட்டபுள் லேப்டாப் மிகவும் உறுதியான சேசிஸைக் கொண்டுள்ளது. அதுபோல் 128ஜிபி சாலிட் ஸ்டேட் டிரைவைக் கொண்டுள்ளது.

இந்த புதிய லேப்டாப்பில் சேமித்து வைக்கும் தகவல்கள் எந்த சூழ்நிலையிலும் அழிந்துவிடாத பாதுகாப்பு வசதியை இந்த லேப்டாப் வழங்குகிறது. இதன் கோர் ஐ5 - 2537எம் பிராசஸர் மூலம் விளையாட்டு மற்றும் பிற அப்ளிகேசன்களை இதில் இயக்க முடியும். இதன் பேட்டரியின் இயங்குதிறன் 7 மணி நேரம் ஆகும். அதனால் இதன் இயங்கு திறன் மிக அபாரமாக இருக்கும்.

இந்த சாம்சங் வரிசை 9 லேப்டாப் 64பிட் விண்டோஸ் 7 ஹோம் பிரீமியம் இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இது மைக்ரோசாப்ட்டின் சிக்னேச்சர் கொண்டு வருவதால் இதன் சாப்ட்வேருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதாவது இது மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எஸ்ஸன்சியல்ஸ் ஆண்டி வைரஸ் சாப்ட்வேரை கொண்டுள்ளது.

சாம்சங் வரிசை 9 லேப்டாப் 13.3 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருப்பதால் மற்ற அல்ட்ரா போர்ட்டபுள் நோட்புக்குகளை விட பளிச் என்று இருக்கும். மேலும் இந்த டிஸ்ப்ளே ஆன்டி க்ளேர் கோட்டிங் வசதியும் கொண்டது. அதனால் இதை வெளியிடங்களிலும் மிக அருமையாகப் பயன்படுத்த முடியும்.

இதன் திரையின் ரிசலூசன் 1366x768 ஆகும். மேலும் இதில் வயர்லஸ் விடி சப்போர்ட் உள்ளதால் இதன் டிஸ்ப்ளே டிவியைப் போல் மிக அகலமாக தெரியும். மேலும் எஸ்ஆர்எஸ் ப்ரீமியம் ஸ்பீக்கர்களும் இந்த லேப்டாப்புக்கு மெருகு சேர்க்கின்றன.

இதன் பேக்லிட் கீபோர்ட் டைப் செய்வதற்கு மிக அருமையாக இருக்கும். இதன் டிராக்பேட் மிகவும் பதமாக இருக்கும். இதன் ட்ராக் பேட் பெரிதாக இருப்பதால் இதில் கைவைத்து டைப் செய்ய மிக வசதியாக இருக்கும்.

இந்த சாம்சங் வரிசை 9 லேப்டாப்பில் யுஎஸ்பி 3.0 போர்ட் உள்ளது. அதே நேரத்தில் இதன் யுஎஸ்பி 2.0 மூலம் எம்பி3 ப்ளேயர் மற்றும் மொபைலை சார்ஜ் செய்ய முடியும். அதுபோல் உயர் டெபினிசன் கொண்ட 1.3 மெகா பிக்சல் வெப்கேமையும் இந்த லேப்டாப் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பின் மெமரி 4ஜிபி டிடிஆர் ஆகும். மேலும் இது 3 ஆண்டு உத்திரவாதத்துடன் வருகிறது. இதன் விலை ரூ.75,000லிருந்து இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X