விண்டோஸ் 10 கம்ப்யூட்டரிலும் இயங்கும் கோர்ட்டானா

By Siva
|

ஆப்பிள் ஐபோனில் உள்ள 'சிறி' மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து அதேபோன்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்த பர்சனல் அசிஸ்டெண்ட் செயலிதான் கோர்ட்டானா என்பது அனைவரும் அறிந்ததே.

விண்டோஸ் 10 கம்ப்யூட்டரிலும் இயங்கும் கோர்ட்டானா

இந்த கோர்ட்டானா தற்போது விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்ட லேப்டாப் மற்றும் டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரிலும் செயல்படுகிறது என்பது அனைவருக்குமான இன்ப அதிர்ச்சி தகவல் ஆகும். இதுகுறித்து விரிவான தகவலை தற்போது பார்ப்போம்

டெக்ஸ்டாப் மற்றும் லேப்டாப்புக்கும் கோர்ட்டானா

டெக்ஸ்டாப் மற்றும் லேப்டாப்புக்கும் கோர்ட்டானா

ஆரம்பத்தில் விண்டோஸ் மொபைல் போன்களுக்கு மட்டுமே பொருந்து வகையில் உருவாக்கப்பட்டது தான் கோர்ட்டானா செயலி. ஆனால் தற்போது விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்ட டெக்ஸ்டாப் மற்றும் லேப்டாபிலும் செயல்படும் வகையில் டெக்னாலஜி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் கோடிக்கணக்கானோர் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது. மைக் பட்டனை க்ளிக் செய்து அதன் பின்னர் ஸ்டார்ட் பட்டனையும் தேர்வு செய்தால் போதும் உங்கள் கம்ப்யூட்டரில் கோர்ட்டானா செயல்பட ஆரம்பித்துவிடும்

இயங்குதளத்திற்கு இணக்கமானது

இயங்குதளத்திற்கு இணக்கமானது

விண்டோஸ் 10 இயங்கு தளத்தை அப்டேட் செய்தால், மைக்ரோசாப்ட் நிறுவனம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள இண்டர்நெட் எக்ஸ்புளோரின் எட்ஜ் வெர்ஷனை அளிக்கும்.

கோர்ட்டானால் மற்றும் எட்ஜ் பிரெளசர் ஆகியவை ஒன்றுக்கு ஒன்று இணக்கமாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் எட்ஜ் பிரெளசரில் பாப் அவுட் முறையில் வாய்ஸ் அசிஸ்டெண்ட் செயலியை பயன்படுத்தி கொள்ளலாம்

ஃபைல்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்

ஃபைல்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்

உங்கள் கம்ப்யூட்டரில் அதிகளவில் ஃபைல்கள் இருந்தால் எந்த பைல் எங்கு இருக்கின்றது என்பதை கண்டுபிடிக்க நீங்கள் கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. கோர்ட்டானா வாய்ஸ் அசிஸ்டெண்ட் மூலம் ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் ஃபைலாக இருந்தாலும் கிளவுடில் இருக்கும் ஃபைலாக இருந்தாலும் உடனே கண்டுபிடித்துவிடலாம்

எளிய வகையில் பட்டன்கள்

எளிய வகையில் பட்டன்கள்

விண்டோஸ் 10 இயங்கு தளத்தில் கோர்ட்டானாவை செயல்படுத்த எளிதான பட்டன்கள் உருவாக்கப்பட்டிருப்பதால் கம்ப்யூட்டர் அறிவு குறைவானவர்கள் கூட பட்டன்களை அழுத்தி வாய்ஸ் அசிஸ்டெண்ட் சேவையை பெற்று கொள்ளலாம்

பரந்து விரிந்த பிளாட்பார்ம்

பரந்து விரிந்த பிளாட்பார்ம்

சிறி ஆப்பிள் ஐபோனில் மட்டுமே இயங்கும், அதேபோல் கூகுள் நெள செயலியும் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் மட்டுமே இயங்கும். ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கோர்ட்டானா, மைக்ரோசாப்ட் மொபைல் போன்கள், விண்டோஸ் 10 கம்ப்யூட்டர்கள் மற்றும் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் போன்களிலும் இயங்கும் வகையில் உள்ளது.

வாய்ஸை வேறுபடுத்தவும் உதவும்

வாய்ஸை வேறுபடுத்தவும் உதவும்

மற்ற வாய்ஸ் அசிஸ்டெண்ட் செயலிகள் போல் இல்லாமல் இந்த கோர்ட்டானா, கம்ப்யூட்டருக்கு சொந்த்க்காரரின் வாய்ஸை தனியாக கண்டுபிடித்து அதற்கேற்ப செயல்படும் வகையை சேர்ந்தது. எனவே பல நபர்கள் ஒரே கம்ப்யூட்டரில் இந்த கோர்ட்டானாவை பயன்படுத்தினாலும் குரல்களை வேறுபடுத்தி அவரவர்களுக்கு தகுந்த சேவையை அளிக்கும்

சில நகைச்சுவையும் உண்டு

சில நகைச்சுவையும் உண்டு

உங்களுடைய கட்டளைகளை நிறைவேற்றும் ஒரு செயலியாக மட்டுமின்றி இந்த கோர்ட்டானா உங்களுக்கு போர் அடிக்கும் நேரத்தில் ஜோக் சொல்லவும், பாட்டு பாடி மகிழ்விக்கவும் செய்யவும்.

இடத்திற்கு தகுந்தவாறு செயல்படும்

இடத்திற்கு தகுந்தவாறு செயல்படும்

கோர்ட்டானா பயன்படுத்தும் போனில் நீங்கள் லொகேஷனை பதிவு செய்து வைத்திருந்தால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு தகுந்தவாறு உங்கள் தேவைகளை ஞாபகப்படுத்தும். குறிப்பாக மளிகைக்கடையில் நீங்கள் இருந்தீர்கள் என்றால் நீங்கள் என்னென்ன வாங்க வேண்டும் என்று ரிமைண்டரில் குறிப்பிட்டு வைத்திருந்தீர்களோ அதை உங்களுக்கு ஞாபகப்படுத்தும்

Best Mobiles in India

Read more about:
English summary
Redmond-based Microsoft introduced its voice assistant similar to Apple's Siri, namely Cortana. As Windows 10 gets the update, so does the Cortana.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X