கம்ப்யூட்டரில் ஏற்படும் சபதத்தை குறைக்க 7 வழிகள்.!

கேம்ஸ் விளையாடும்போது தொல்லை தரும் பாப் அப், மற்றும் தேவையில்லாத சப்தங்களை நீக்குவது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்.

|

கம்ப்யூட்டரை அதிக அளவில் கேம்ஸ் விளையாட பயன்படுத்துபவர்கள் நிச்சயம் அதற்கான சக்திவாய்ந்த சிபியூவை பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்ததே. இருப்பினும் கேம்ஸ் பிரியர்களுக்கு ஒருசில சிக்கல்கள் பொதுவாக ஏற்படுவதுண்டு.

அந்த சிக்கல்களை நீக்கி நல்ல அனுபவத்துடன் கேம்ஸ் விளையாட பல வழிகள் உண்டு. குறிப்பாக கேம்ஸ் விளையாடும்போது தொல்லை தரும் பாப் அப், மற்றும் தேவையில்லாத சப்தங்களை நீக்குவது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்.

சப்தம் இல்லாத ஃபேன்களை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யுங்கள்

சப்தம் இல்லாத ஃபேன்களை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யுங்கள்

கம்ப்யூட்டரில் அதிக சப்தம் வரும் ஒரே விஷயம் ஃபேன் தான். கம்ப்யூட்டர் வெப்பமாகாமல் இருப்பதற்கு ஃபேன் அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில் அந்த ஃபேனால் ஏற்படும் சப்தம் நமது வேலையை பாதிக்கலாம். ஃபேனின் சைஸ்கள் பொதுவாகம் 80மிமீ, 120மிமீ, 140 மிமீ, மற்றும் 200 மிமீகளில் கிடைக்கும்,. நல்ல தரமான, பிரிமியர் ஃபேன்கள் கொஞ்சம் விலை அதிகமாக இருந்தாலும் அதன் ரிசல்ட் சப்தம் அதிகமாக வருவதை தடுக்கும் என்பதால் அந்த மாதிரியான ஃபேன்களை பயன்படுத்த வேண்டும்

வைப்ரேஷன் இல்லாத ஃபேன்களை இன்ஸ்டால் செய்யுங்கள்

வைப்ரேஷன் இல்லாத ஃபேன்களை இன்ஸ்டால் செய்யுங்கள்

ஃபேன்கள் ஓடும்போது வைப்ரேட் ஆனால் அதன் சப்தம் நமக்கு தொல்லையாக இருக்கும். எனவே வைப்ரேட் ஆகாதவாறு ஆன்ட்டி வைப்ரேஷன் பேட்களை வாங்கி உபயோகிக்கலாம். மேலும் ஃபேனில் உள்ள ஸ்க்ரூ சரியாக மாட்டாமல் இருந்தாலும் சப்தம் வர வாய்ப்பு உள்ளது.

ஸ்பீடு கண்ட்ரோல் உள்ள ஃபேனை பயன்படுத்துங்கள்

ஸ்பீடு கண்ட்ரோல் உள்ள ஃபேனை பயன்படுத்துங்கள்

கம்ப்யூட்டரில் ஸ்பீட் கண்ட்ரோல் உள்ள ஃபேனை பயன்படுத்துவது உண்மையில் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும், கம்ப்யூட்டரில் உள்ள சிபியூ, மதர்போர்டு ஆகியவை சூடாகும் தன்மைக்கு ஏற்ப ஃபேனின் வேகத்தை அதிகரிக்கவோ அல்லது குறைத்து கொள்ளவோ செய்யலாம். அதேபோல் லோட் ஆகும் டேட்டாக்களை பொறுத்தும், கம்ப்யூட்டரின் வெப்பத்தை பொறுத்தும் ஃபேனின் வேகத்தை மாற்றி கொள்ளலாம்.

கொயட் கேஸ் ஃபேனை வாங்குங்கள்

கொயட் கேஸ் ஃபேனை வாங்குங்கள்

கம்ப்யூட்டருக்கு என்றே வடிவமைக்கப்பட்ட கொயட் கேஸ் ஃபேன்கள் மார்க்கெட்டில் கிடைக்கும். இந்த வகையான ஃபேன்கள் கம்ப்யூட்டரின் அமைதிக்கு உதவும் தன்மை உடையது. பல தரங்களில் இந்த கொயட் கேஸ் ஃபேன்கள் கிடைக்கின்றான. அவற்றின் உதவியுடன் உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்படும் சப்தத்தை குறைக்கலாம்

கம்ப்யூட்டரில் உள்ள ஒருசில பொருட்களை மாற்ற வேண்டும்

கம்ப்யூட்டரில் உள்ள ஒருசில பொருட்களை மாற்ற வேண்டும்

ஒரு கம்ப்யூட்டரில் மெக்கானிக்கல் ஹார்ட் டிரைவ்கள், சிபியூ/ஜிபியூ கூலர்கள் மற்றும் பிஎஸ்யூ ஆகியவை இருந்தால் அவை சப்தம் அதிகம் உண்டாக்குபவைகள். ஹார்ட் டிரைவ்களுக்கு பதில் எஸ்டிடி பயன்படுத்தினால் நிச்சயம் சப்தத்தின் அளவு பெருமளவு குறையும். சிபியூ மற்றும் ஜிபியூ அதிகளவில் வெப்பமானால் நிச்சயம் சப்தமும் அதிகளவில்தான் இருக்கும். இந்த சப்தத்தில் இருந்து விடுதலை பெற அவற்றை மாற்றவும் அல்லது அப்கிரேட் செய்யவும்

வாட்டர் கூலிங்

வாட்டர் கூலிங்

வாட்டர் கூலிங் என்பது கொஞ்சம் அதிகம் செலவானதாக இருந்தாலும், உங்கள் கம்ப்யூட்டரின் சப்தத்தை அது அதிகளவு குறைக்கும். இது இன்ஸ்டால் செய்வதற்கு கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் இதனை நீங்கள் சரியாக செய்துவிட்டால் உங்கள் புதுவித அனுபவம் கிடைக்கும்.

கேபிள் மேனேஜ்மெண்ட்டை இன்ஸ்டால் செய்யுங்கள்

கேபிள் மேனேஜ்மெண்ட்டை இன்ஸ்டால் செய்யுங்கள்

கம்ப்யூட்டரில் ஏற்படும் சப்தத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதில் இருக்கும் கேபிள்களால் உண்டாகுவது. ஜிப்டைஸ், வெல்க்ரோ லூப்ஸ், மற்றும் கேபிள் ரூட்டிங் ஆகிய கேபிள் மேனேஜ்மெண்ட்டுகள் சப்தத்தை பெருமளவு குறைக்கும் தன்மை உடையவை

Best Mobiles in India

English summary
7 ways to make a noisy gaming PC silent: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X