குறைந்த விலையில் புதிய டேப்லெட்: சாம்சங் தயாரிக்கிறது

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி டேப் வரிசை டேப்லெட்டுகள் மூலம் பல வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் ஈர்த்திருக்கிறது. அந்த டேப்லெட்டுகள் வசூலில் பெரிய சாதனையையும் படைத்திருக்கின்றன.
தற்போது வந்திருக்கும் தகவல் என்னவென்றால் சாம்சங் ஒரு நவீன தொழில் நுட்பம் கொண்ட குறைந்த விலை டேப்லெட்டை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது என்பதாகும். இந்த புதிய டேப்லெட் அமேசான் கின்டில் பயருக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த புதிய டேப்லெட்டைப் பற்றி அதிகமான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்த டேப்லெட்டின் மாடல் ஜிடி-பி3100 என்று சொல்லப்படுகிறது. இந்த மாடல் எண்ணைக் கொண்டே இந்த டேப்லெட் கேலக்ஸி வரிசையில் வருகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு சில இணைய தளங்களிலிருந்து வந்திருக்கும் தகவல்களின்படி பார்த்தால் இந்த டேப்லெட் 7 இன்ச் அளைவக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மேலும் எஆர்எம்11 ப்ராசஸரைக் கொண்டிருக்கும் என்ற தகவலும் வருகின்றன.
இதன் 7 இன்ச் டிஸ்ப்ளே 1024 x 600 பிக்சல் ரிசலூசனை வழங்கும். இந்த தகவல்கள் உண்மையாக இருந்தால் 800 மெகாஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட தனது சொந்த சாம்சங் எஸ்3சி610 அப்ளிகேசன் ப்ராசஸரை இந்த டேப்லெட்டில் வழங்கும். இந்த ப்ராசஸர் குறைந்த மின் திறனில் இயங்கும். அதனால் இதன் பேட்டரி நீண்ட இயங்கு நேரத்தை வழங்கும்.
ஆனால் இந்த புதிய டேப்லெட்டைப் பற்றிய படங்கள் இன்னும் வெளிவரவில்லை. இது குறைந்த விலையில் வருவதால் இது முகப்பு கேமரா மட்டும் கொண்டு வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளலாம். இதன் இயங்கு தளம் பற்றியும் எந்த ஒரு தகவலும் வரவில்லை. ஆனால் ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தைக் கொண்டுவர வாய்ப்பிருக்கிறது.


Click it and Unblock the Notifications