இந்த ஆறு முக்கிய போர்ட்டுக்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

இந்த போர்ட்டுக்கள் கம்ப்யூட்டருக்கு வெளியே உள்ள உபகரணத்துடன் இணைத்து அதை வேலை செய்ய வைக்க உதவுகிறது.

By Siva
|

ஒரு கம்ப்யூட்டரையும் மற்ற பொருட்களையும் இணைக்கும் முக்கிய போர்ட்டுகள் குறித்து தெரிந்து கொள்வது மிக அவசியம். கம்ப்யூட்டரின் மதர்போர்டில் இருந்து பல்வேறு உபகரணங்களை இணைக்கும் இந்த போர்ட் பெரும்பாலும் பெண் தன்மையுள்ள போர்ட்டுகளாக தான் இருக்கும்.

இந்த ஆறு முக்கிய போர்ட்டுக்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

இந்த போர்ட்டுக்கள் கம்ப்யூட்டருக்கு வெளியே உள்ள உபகரணத்துடன் இணைத்து அதை வேலை செய்ய வைக்க உதவுகிறது. இந்த போர்ட்டுகளை சீரியல் மற்றும் பேரலல் போர்ட்டுகள் அல்லது ஆண்-பெண் போர்ட்டுகள் என்று அழைக்கப்படும். இங்கு சில முக்கிய போர்ட்டுகள் குறித்து பார்ப்போம்

யூஎஸ்பி (USB)

யூஎஸ்பி (USB)

கம்ப்யூட்டர், டிவி, ஸ்மார்ட்போன் என பல உபகரணங்களில் பயன்படுத்தப்படும் பொதுவான போர்ட் யூஎஸ்பி போர்ட் ஆகும். இந்த போர்ட்டுக்கள் கம்ப்யூட்டரில் வெளியே உள்ள பொருட்களை இணைக்க உதவும். முன்பக்கம் அல்லது பின்பக்கம் என இரண்டு வழிகளிலும் இந்த போர்ட் மூலம் வெளி உபகரணங்களை இணைக்கலாம்

இந்த போர்ட்டுகள் டேட்டாக்களை மிக அதிக வேகத்தில் பரிமாற்றம் செய்து கொள்ள உதவுகிறது. இந்த யூஎஸ்பி போர்ட்டுகள் பலவிதங்களில் உள்ளது. குறிப்பாக ஒரிஜினல் யூஎஸ்பி, அடிப்படை யூஎஸ்பி டிரெடெண்ட், சூப்பர் வேக யூஎஸ்பி மற்றும் யூஎஸ்பி 3.0. இவற்றில் 3.0 யூஎஸ்பி லேட்டஸ்ட் மற்றும் அதிவேகமானது ஆகும்

HDMI

HDMI

High Definition Multimedia Interface என்பதன் சுருக்கமே இந்த HDMI. கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் டிவிக்களில் பயன்படுத்தப்படும் லேட்டஸ்ட் போர்ட் இதுதான். கம்ப்யூட்டர் கேம் விளையாட, புளூ ரே பிளேயர்ஸ் ஆகியவற்றை கம்ப்யூட்டருடன் இணைக்க இந்த HDMI போர்ட் உதவுகிறது. இந்த யூஎஸ்பி கம்ப்ரஸ்ட் அல்லது அன் கம்ப்ரஸ்ட் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை டிரான்ஸ்பர் செய்கின்றன

ஆடியோ:

ஆடியோ:

கம்ப்யூட்டருக்கு வெளியே உள்ள ஆடியோ உபகரணங்களை கம்ப்யூட்டருடன் இணைக்க உதவுவது இந்த ஆடியோ யூஎஸ்பி. வெளியே உள்ள ஆடியோ உபகரணத்திற்கு தகுந்தவாறு இந்த ஆடியோ யூஎஸ்பி மாறுபடும்.

பொதுவாக 3.5 மிமீ போர்ட் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஸ்டீரியோ ஹெட்போன்கள், சவுண்ட் சேனல்கள் ஆகியவற்றை கம்ப்யூட்டரில் இது இணைக்கும். மேலும் மைக்ரோபோன்கள் உள்பட பெரும்பாலும் கம்ப்யூட்டரில் 6 கனெக்டர்கள் போர்ட் ஆடியோவுக்கு உதவுகிறது

வீடியோ போர்ட்:

வீடியோ போர்ட்:

VGA என்று கூறப்படும் இந்த வீடியோ போர்ட்டுகள் வீடியோவை கம்ப்யூட்டரில், டிவிக்களில் புரஜக்டர்களில் கனெக்ட் செய்ய உதவுகிறது. மேலும் இந்த VGA போர்ட் வீடியோக்களின் தரத்தை மாற்றியமைத்து 648x480 என்ற ரெசலூசனில் தெரிய வைக்கவும் இந்த போர்ட்டுகள் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

யூஎஸ்பி டைப் C:

யூஎஸ்பி டைப் C:

சமீபத்தில் வெளியான ஒரு ரிவர்ஸ் கனெக்டர் தான் இந்த டைப் C கனெக்டர். டைப் ஏ மற்றும் டைபி ஆகிய கனெக்டர்களுக்கு மாற்றாக அமைந்துள்ள இந்த கனெக்டர்கள் எதிர்காலத்தில் வெகுவேகமாக பரவும் ஒரு கனெக்டர் என்றால் அது மிகையில்லை. லேப்டாப், ஸ்மார்ட்போன் உள்பட அனைத்து முக்கிய பொருட்களிலும் இந்த கனெக்டர் பயன்படும் என்பதால் தற்போதைய டிரெண்ட் இதுதான். மேலும் இந்த போர்ட் ஸ்மார்ட்போன்களில் மிக வேகமாக சார்ஜ் செய்ய உதவும் ஒரு கனெக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதெர்நெட் போர்ட்:

எதெர்நெட் போர்ட்:

கம்ப்யூட்டருக்கு இண்டர்நெட் கனெக்ஷன் கொடுக்க உதவும் போர்ட்டுக்கு பெயர்தான் எதெர்நெட் போர்ட். இது லேண்ட்லைன் தொலைபேசியில் இருக்கும் கனெக்டர் போன்று இருக்கும்.

இந்த போர்ட்டில் லேட்டஸ்ட்டாக ஜிகாபிட் எதெர்நெட் என்ற போர்ட் அறிமுகமாகியுள்ளது. இதன்மூலம் மிக வேகமாக அதாவது ஒரு வினாடிக்கு 10 ஜிகாபிட் டேட்டாக்களை டிரான்ஸ்பர் செய்யலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
A port is a point where the communication between the computer and external devices happens. The female end of the connector is the port that usually sits on the motherboard.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X