3டி தொழில்நுட்பத்துடன் வரும் மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர்!

Posted By: Karthikeyan
3டி தொழில்நுட்பத்துடன் வரும் மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர்!

தொழில் நுட்பத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் எல்லா நிறுவனங்களும் 3டி தொழில் நுட்பத்தை கொண்டு வருவதில் அதிக அக்கறை காட்டுகின்றன. எப்போதுமே வேகத்திற்கு பெயர் பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனம் 3டி தொழில் நுட்பத்தைக் களமிறக்குகிறது. அதாவது மைக்ரோசாப்ட் தனது புதிய கினக்ட் 3டி மேசை கணினிகளைக் களமிறக்குகிறது.

எதிர்காலத்தின் தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுக்கின்ற இந்த 3டி தொழில் நுட்பம் கொண்ட மேசைக் கணினிகளை அறிமுகம் செய்வதன் மூலம் மைக்ரோசாப்ட் உலகத்தின் பார்வையை இப்போது தன் பக்கம் ஈர்த்துள்ளது. இந்த 3டி மேசைக் கணினி ஒஎல்இடி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இந்த டிஸ்ப்ளே பயன்படுத்துவோரை மிக எளிதாக கவர்ந்துவிடும். இந்த புதிய மைக்ரோசாப்ட் கினக்ட் மேசை கணினியை உடல் செய்கைகள் மூலம் இயக்க முடியும்.

இந்த மேசைக் கணினி ஒரு தனி நபர் கணினியைப் போன்றே தோன்றுகிறது. இதன் கீபோர்டு அட்டகாசமாக உள்ளது. இதில் இருக்கும் வெர்ச்சுவல் என்வைரன்மென்ட் இந்த மேசைக் கணினியின் முக்கிய சிறப்பு அம்சமாகும். மேலும் இந்த கணினியில் 3டியிலிருந்து 2டிக்கு மிக எளிதாகச் செல்ல முடியும். அதுபோல் 3டிக்குச் செல்வதும் மிக எளிதாக இருக்கும்.

இந்த 3டி மேசைக் கணினி மைக்ரோசாப்டின் முற்றிலும் மாறுபட்ட ஒரு கலக்கலான தயாரிப்பாகும். இந்த மேசைக் கணினினியைப் பற்றிய இதர தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. விரைவில் இந்த கணினி விற்பனைக்கு வந்துவிடும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot