Home
Computer

அமேசான் கிண்டில் மற்றும் கோபோ வோக்ஸ் டேப்லெட்டுகள் ஒப்பீடு

By Super
அமேசான் கிண்டில் மற்றும் கோபோ வோக்ஸ் டேப்லெட்டுகள் ஒப்பீடு
அமேசான் மற்றும் கோபோ வோக்ஸ் ஆகிய நிறுவனங்கள் டேப்லட் சந்தையில் ஒன்றுக்கொன்று சரியான போட்டியை கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. தற்போது டேப்லட்டுகளுக்கு உலக சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.

மேலும் ஒவ்வொரு நாளும் புதிய புதிய டேப்லட்டுகள் புதிய புதிய தொழில் நுட்பங்களுடன் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் அமேசான் நிறுவனம் தனது அமேசான் கின்டில் பயர் என்ற டேப்லட்டையும் அதுபோல் கோபோ வோக்ஸ் நிறுவனம் கோபோ வோக்ஸ் என்ற டேப்லட்டையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த இரண்டு டேப்லட்டுகளும் மொபைல் சந்தையில் ஒன்றுக்கொன்று சளைக்காமல் போட்டியிடும் என நம்பலாம்.
இந்த இரண்டு டேப்லட்டுகளும் 7 இன்ச் திரை டிஸ்ப்ளே கொண்டு 1024 x 600 பிக்சல் ரிசலூசனுடன் வருகிறது. இரண்டின் மெமரி சேமிப்பைப் பார்த்தால் அது 8ஜிபி ஆகும்.

அமேசான் கின்டில் பயரின் எடை 403 கிராம் ஆகும். அதே நேரத்தில் கோபோ வோக்சின் எடை கின்டில் பயரைவிட சற்று குறைவானதாகும். கின்டில் பயரின் பேட்டரி பேக்கப் 8 மணி நேரமும் அதே நேரத்தில் கோபோ வோக்சின் பேட்டரி பேக்கப் 7 மணி நேரமும் ஆகும்.

அமேசான் கின்டில் பயர் ஆன்லைன் சப்போர்ட்டட் புக் ஸ்டோருடன் வருகிறது. அதனால் இதில் 3 மில்லியன் தலைப்புகளை இதில் சேமிக்கலாம். அதே நேரத்தில் கோபோ வோக்சில் 2 மில்லியன் தலைப்புகளை சேமிக்கலாம்.
கின்டில் பயரின் மொத்த பரப்பு 7.5 x 4.7 x 0.45 ஆகும் அதே நேரத்தில் கோபோ வோக்சின் மொத்த பரப்பு 7.57 x 5.06 x 0.53 ஆகும். இரண்டு டேப்லட்டுகளுமே போர்ட்டபுள் மற்றும் எடை குறைந்த டேப்லட்டுகளாகும்.

ஒரு சில சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் கோபோவில் அதி வேக சில்க் ப்ரவுசர் உள்ளது. அதே நேரத்தில் கின்டில் பயரில் ப்ரீ க்ளவுட் சேமிப்பு உள்ளது. கோபோ வோக்ஸ் ரீடிங் லைப் கொண்டு வருகிறது. கின்டில் கருப்பு நிறத்தில் மட்டும் வருகிறது.

ஆனால் கோபோ கருப்பு, பிங்க் பச்சை மற்றும் ஊதா ஆகிய நிறங்களில் வருகிறது. கிண்டில் பயர் நவம்பர் 15ல் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கோபோ வோக்ஸ் அக்டோபர் இறுதிக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலையைப் பொருத்த மட்டில் இந்த இரண்டு டேப்லட்டுகளுமே ரூ.10000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X