Home
Computer

தோஷிபா சாட்டிலைட் எல்735-எஸ்3220ஆர்டி-சிறப்பு பார்வை

By Super
தோஷிபா சாட்டிலைட் எல்735-எஸ்3220ஆர்டி-சிறப்பு பார்வை
தோஷிபா சாட்டிலைட் எல்735-எஸ்3220ஆர்டி - அல்ட்ரா போர்ட்டபுள் லேப்டாப்

சாட்டிலைட் எல்735-எஸ்3220ஆர்டி என்ற குறியீட்டு பெயரில் புதிய நோட்புக்கை தோஷிபா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இது அளவில் சிறியதாகவும், இலகுவான எடை கொண்டதாகவும் இருக்கிறது இந்த நோட்புக்.

இது அல்ரா போர்ட்டபுளாக இல்லையானாலும் இது ப்ளூ ரே கொண்டிருப்பதால் இதன் விலை சற்று அதிகமாகும். இந்த லேப்டாப் கருப்பு நிற கீ கொண்டு சிவப்பு நிறத்தில் மிகவும் கவரக்கூடிய வகையில் வருகிறது.

தோஷிபா சாட்டிலைட் எல்735-எஸ்3220ஆர்டின் திரை டிஸ்ப்ளே 13.3 இன்ச் ஆகும். இதன் ரிசலூசன் 1366X768 பிக்சல் ஆகும். மேலும் இதன் எடை 4.3 பவுண்டுகளாகும். இதன் யுனிட் கோர் ஐ5-2410 எம் சிபியு கொண்டுள்ளது. அதனால் இதன் வேகம் சற்று அதிகமாக இருக்கும்.

இதன் தடிமன் அரை இன்ச் ஆகும். அதனால் இதை அல்ட்ரா போர்ட்டபுள் லேப்டாப் என்று அழைக்கலாம். தோஷிபா சாட்டிலைட் எல்735-எஸ்3220ஆர்டி 4ஜிபி மெமரியைக் கொண்டிருக்கிறது. இதன் வீடியோ ப்ளேபேக் எச்டி கம்பாட்டிபிளிட்டியைக் கொண்டிருப்பதால் இது 1080பி வீடியோக்களை இயக்கும் திறன் கொண்டது.

தோஷிபா சாட்டிலைட் எல்735-எஸ்3220ஆர்டி 2.0 வெர்சன் கொண்ட 3 யுஎஸ்பி போர்ட்டுகளைக் கொண்டிருக்கிறது. அதுபோல் எச்டிஎம்ஐ மற்றும் வீடியோ அவுட்புட்டையும் கொண்டிருக்கிறது. இதன் எச்டிஎம்ஐ போர்ட் மூலம் இதன் டிஸ்ப்ளேயை டிவி திரைகளைப் போல பெரிதாக்க முடியும்.

மேலும் இது கென்சிங்டன் லாக் போர்ட்டும் கொண்டுள்ளது. அதுபோல் எஸ்டி/எம்எம்சி கார்ட் ரீடரும் இதில் அடக்கம். அடுத்ததாக வயர்லஸ் எல்எஎன் வைபோ 802, 11பி/ஜி/என் மற்றும் 10/100 எர்த்நெட்டும் இதன் சிறப்பு ஆகும். மேலும் சின்க்ரோனைஸ் செய்யும் வசதி கொண்ட ப்ளூடூத்தும் இதற்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

தோஷிபா சாட்டிலைட் எல்735-எஸ்3220ஆர்டி விண்டோஸ் 7 ஹோம் பிரீமியம் ப்ளாட்பார்மில் இயங்குகிறது. இதில் கோரல் வின் டிவிடியும் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.24,000மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X