Home
Computer

வாட்டர் புரூப் தொழில்நுட்பத்துடன் வரும் புதிய பிஜிட்சூ டேப்லெட்

By Super
வாட்டர் புரூப் தொழில்நுட்பத்துடன் வரும் புதிய பிஜிட்சூ டேப்லெட்
பிஜிட்சூ நிறுவனம் மென்பொருள் உற்பத்தியில் ஒரு சிறந்த நிறுவனமாகும். அந்த நிறுவனம் இப்போது சந்தையின் நிலவரம் அறிந்து இப்போது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மற்ற சாதாரண ஸ்மார்ட் போன் போன்று அல்ல. இது தனித்துவத்துடன் தண்ணீர் உட்புகாதவாறு தடுப்பு வசதி கொண்டதாக இருக்கும்.

பிஜிட்சூவின் டேப்லட் முதல் தண்ணீர் தடுப்பு வசதி கொண்ட டேப்லட்டாக இருப்பதால் அதன் விலையும் சற்று அதிகமாக இருக்கும். இந்த புதிய டேப்லட்டின் பெயர் ஆரோஸ் எல்டிஇ எப்-01டி ஆகும். இது 10.1 இன்ச் டபுள்யுஎக்ஸ்ஜிஎ டிஸ்ப்ளே கொண்டு மக்களை கவர வருகிறது.

இது டூவல் கோர் டேக்ரா 2 அல்லது டிஐஒஎம்எபி ப்ராசஸர் கொண்டிருப்பதால் இதன் வேகம் மிக அதிகமாக இருக்கும். மேலும் இது கூகுளின் ஆன்ட்ராய்டு வி2.3.4 அல்லது வி2.3.5 ஜிஞ்சர்ப்ரீட் ஓஎஸ்ஸில் இயங்கும். அதனால் இதன் செயல் திறனைப் பற்றி கூறத் தேவையில்லை.

இதன் எடை 597 கிராம்களாகும். மேலும் இதன் தடிமன் 11.3 மிமீ ஆகும். அதனால் இதை எளிதில் எடுத்துச் செல்லலாம். இது ஐபிX5/ஐபிX7 தண்ணீர் தடுப்பு தொழில் நுட்பத்தைக் கொண்டிருப்பதால் நீருக்கடியிலும் இதில் வீடியோ மற்றும் மொபைல் டிவியைப் பார்க்க முடியும்.

இதன் கூல் ஹேன்ட் ஜெஸ்ட்சர் கண்ட்ரோல் தொழில் நுட்பம் இதை இயக்குவதற்கு எளிதான வசதிகளை வழங்குகிறது. எனவே நாம் இந்த டிவைஸை தொட வேண்டிய அவசியமில்லை. அதாவது நமது வயோலா மற்றும செய்கைகள் மூலம் இந்த டேப்லட்டை இயக்கலாம்.

இந்த நிலையில் என்டிடி டொக்கோமோ இன்க் நிறுவனம் இந்த ஆரோஸ் எல்டிஇ எப்-01டி டேப்லட்டில் கூடுதலாக ப்ராட்பேன்ட் அப்ளிகேஷன்களான ஹூலு மற்றும் குய்க் வீடியோ சேவைகளை இணைப்பதாக அறிவித்தது. அதனால் இதில் மொபைல் டிவி மற்றும் ஆன்லைன் கேமிங் சிறப்பாக இருக்கும்.

மேலும் ஆரோஸ் எல்டிஇ எப்-01டி 5 மெகா பிக்ஸல் கேமராவும் 1.3 மெகா பிக்ஸல் துணை கேமராவும் கொண்டுள்ளது. மேலும் இது 32ஜிபி மெமரி சேமிப்பு வசதியை வழங்குகிறது. இன்னும் இதன் விலை அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் பெரிய எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தியிருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X