டேப்லட்டுகளின் புரட்சி ஆசஸ் டப் 7 இன்ச் டேப்லெட்

அதன் பின் ஆன்லைன் சந்தை வந்து ஆன்லைன வர்த்தகம் கொடிகட்டி பறக்கிறது. இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் மைக்ரோசாப்ட், கூகுள், ஆசஸ் மற்றும் இன்டல் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கின்றன.
இதற்கடுத்தாற்போல் டெஸ்க்டாப் கணினிகள் பெரியதாக இருக்கின்றன. அதனால் அதன் முன் உட்காருவது சற்று சிரமமாக இருக்கிறது என்று மக்கள் உணர ஆரம்பித்தினர். அதனால் கணினியைவிட சிறிய போர்ட்டபுள் டிவைஸ்களை நாட ஆரம்பித்தினர்.
இந்த எண்ணம் ஆன்ட்ராய்டு டேப்லட் மற்றும் ஸ்மார்ட்போன்களின் புரட்சிக்கு வித்திட்டன. அவற்றில் முன்னோடியாக நவீன டேப்லட்டுகளை வழங்குவதில் ஆசஸ் நிறுவனம் முன்னனியில் இருக்கிறது என சொல்லலாம். இப்போது ஆசஸ் நிறுவனம் புதிதாக ஆசஸ் டப் என்ற புதிய ஆன்ட்ராய்டு டேப்லட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக இந்த புதிய டேப்லட் ஒரு ஆன்ட்ராய்டு டேப்லட் ஆகும். இது தூசி தடுப்பு வசதி கொண்டது. மேலும் இதில் தண்ணீரில் விழுந்தாலும் சேதம் ஏற்படாது. இது டூவல் கோர் 1ஜிஹர்ட்ஸ் என்விடியா டேக்ரா 2 ப்ராசஸர் கொண்டு கூகுள் ஹனிகோம்ப் 3.2 ஓஎஸ்ஸில் இயங்குகிறது.
16ஜிபி மெமரி சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. மேலும் வைபை மற்றும் ப்ளூடூத் வசதிகளையும் அளிக்கிறது. மேலும் விரிவுபடுத்திக்கூடிய மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட்டும் இதில் உள்ளன. இதன் பேட்டரி 7400எம்எஎச் ஆகும். இதன் 7 இன்ச் டிஸ்ப்ளே மல்டி டச் வசதி கொண்டதாகும்.
மேலும் இது 5 மெகா பிக்ஸல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. இவ்வளவு வசதி கொண்ட இந்த புதிய ஏஸர் டப் டேப்லட்டின் விலை விபரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் இந்த வருட இறுதிக்குள் சந்தைக்கு வந்துவிடும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications