நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய சோனி லேப்டாப்

Posted By: Staff

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய சோனி லேப்டாப்
மின்னணு பொருள்கள் தயாரிப்பில் கில்லி ஆடும் சோனி நிறுவனம் புதிதாக தனது வயோ வரிசையில் விபிசிஇஎச்1எப்ஜிஎக்ஸ் என்ற புதிய லேப்டாப்பை களமிறக்குகிறது.

இந்த புதிய லேப்டாப் பல புதிய நவீன தொழில் நுட்பங்களுடன் வருகிறது. இந்த லாப்டாப் உலகச் சந்தையில் ஒரு மகத்தான வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சோனி வயோ வரிசை விபிசிஇஎச்1எப்ஜிஎக்ஸ் லேப்டாப் இன்டல் கோர் ஐ5-2410எம் 2.3ஜிஹெர்ட்ஸ் கொண்டுள்ளது. இது மற்ற லேப்டாப்புகளை விட சற்று நவீனமானதாகும். மேலும் இது 4ஜிபி ரேமைக் கொண்டுள்ளது. இதன் ஹார்ட் ட்ரைவ் 500ஜிபியைக் கொண்டுள்ளது.

இதன் ஆப்டிக்கல் ட்ரைவ் மூலம் இதிலுள்ள டிவிடி ரைட்டர் மற்றும் டிவிடி ரீடர் ஆகியவற்றை இயக்க உதவுகிறது.

விபிசிஇஎச்1எப்ஜிஎக்ஸின் தோற்றமே மிக பக்காவாக உள்ளது. இதன் திரை அளவு 15.5 இன்ட் ஆகும். இந்த லேப்டாப்பின் மேல் பக்கம் சோனியின் முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும். இதன் டிஸ்ப்ளேயின் ரிசலூசன் 1, 366 x 768 பிக்சல் ஆகும்.

மேலும் அட்டகாசமான க்ராபிக்ஸிற்காக 1ஜிபி க்ராபிக்ஸ் மெமரி கார்டையும் இது கொண்டுள்ளது. மேலும் இது என்விடியா ஜிஇபோர்ஸ் 410எம் கொண்டுள்ளதால் இதில் க்ராபிக்ஸ் வேலைகளை மிக அருமையாகச் செய்யலாம்.

விபிசிஇஎச்1எப்ஜிஎக்ஸின் இயங்குதளம் விண்டோஸ் 7 ப்ரபசனல் ஆகும். அது 64பிட் மைக்ரோ ப்ராசஸரை இயக்குகிறது. அதனால் இதில் சேமிப்பு வசதி மிக அதிகம். இந்த லேப்டாப்பின் மொத்த பரப்பு 1.2 x 14.6 x 9.8 இன்ச் ஆகும். இதன் எடை 6.0எல்பி ஆகும். இதன் சிவப்புநிற கீபோர்டை மிக எளிதாக நகர்த்த முடியும்.

விபிசிஇஎச்1எப்ஜிஎக்ஸின் இணைப்பு வசதியைப் பார்த்தால் அது யுஎஸ்பி 2.0 போர்ட்டை கொண்டுள்ளது. அதுபோல் விஜிஎ மற்றும் எச்டிஎஐ அவுட்புட்டுகளையும் கொண்டுள்ளது. மேலும் எர்த்நெட் லேன் ஜாக், ஹெட்போன் மற்றும் மைக் ஜாக்கையும் கொண்டுள்ளது.

மேலும் இது 802.11பி/ஜி/என் வைபை இணைப்பையும் வழங்குகிறது. இதன் மின் திறனுக்காக இது 3500 மெகா ஹெர்ட்ஸ் லித்தியம்-ஐயன் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரிக்கு 1 வருட உத்திரவாதமும் உண்டு. விபிசிஇஎச்1எப்ஜிஎக்ஸின்வ விலை ரூ.40000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot