Home
Computer

ப்ளேபுக் டேப்லெட்டின் இயங்குதளத்தை மேம்படுத்துவதில் ப்ளாக்பெர்ரி தீவிரம்

By Super
ப்ளேபுக் டேப்லெட்டின் இயங்குதளத்தை மேம்படுத்துவதில் ப்ளாக்பெர்ரி தீவிரம்
ப்ளேபுக் டேப்லெட் கம்ப்யூட்டருக்கு புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை தயாரிப்பதில் ப்ளாக்பெர்ரி நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வெளியிட ப்ளாக்பெர்ரி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பல புதிய தொழில்நுட்ப வசதிகளை உருவாக்குவதற்காக இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கடந்த செவ்வாய் அன்று அதை டெவலப்பர்களிடம் ப்ளாக்பெர்ரி ஒப்படைத்துள்ளது.

இந்த புதிய இயங்குதளம் ஆன்ட்ராய்டின் புதிய அப்ளிகேசன்களை சப்போர்ட் செய்யும் அளவில் இருக்கும் என்று தெரிகிறது. அதுபோல் பீட்டா வெர்சனின் இயங்கு தளத்தைப் பற்றிய வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த புதிய இயங்குதளத்தைப் பெற நாம் காத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது இருக்கும் இயங்குதளம் பக்காவான செயல் திறனைக் கொண்டுள்ளது. ப்ளேபுக்கின் தற்போதைய இயங்கு தளம் ஹோம் திரையை பெர்சனலைஸ் செய்யும் சக்தியைக் கொண்டுள்ளது. அதனால் இதைப் பயன்படுத்துவோர் இதிலுள்ள ஐகன்களை தம் விருப்பத்திற்கேற்ப மாற்றி வைத்துக் கொள்ள முடியும்.

தற்போது புதிய இயங்கு தளத்தை உருவாக்குபவர்கள் அதை விரைவாக முடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான வேலைகள் துரிதமாக நடை பெற்று வருகின்றன.

குறிப்பாக ஸ்மார்ட் போன் துறையில் இயங்கு தளத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அந்த எதிர்பார்ப்பை ஆர்ஐஎம் புதிய இயங்கு தளம் கொண்டு நிறைவு செய்யும் என நம்பலாம். இந்த புதிய இயங்கு தளத்தைப் பற்றி அதிக தகவல்கள் வரவில்லை என்றாலும் இந்த புதிய இயங்கு தளம் வரும் 2012 தொடக்கத்திலேயே வந்துவிடும் என நம்பலாம். அதற்கான வேலையை ப்ளாக்பெரி நிறுவனம் போர்ச் நிறுவனத்துடன் வியாபார ஒப்பந்தம் செய்து விரைவில் அவற்றை விரைவில் வெளியிட இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X