Home
Computer

மலிவு விலையில் புதிய லேப்டாப்பை களமிறக்கியது ஆசஸ்

By Super
மலிவு விலையில் புதிய லேப்டாப்பை களமிறக்கியது ஆசஸ்
ஆசஸ் மலிவு விலையில் யு56இ-பிபிஎல்6 என்ற புதிய மலிவு விலை லேப்டாப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக அதிக விலை லேப்டாப் வாங்க இயலாதவர்களுக்காகவே இந்த புதிய மலிவு விலை லேப்டாப் வருகிறது. இந்த புதிய லேப்டாப் ப்ளாஸ்டிக் கோட்டிங்கிற்குப் பதிலாக அலுமினியம் சேசிஸ் கொண்டு வருகிறது.

மேலும் பார்ப்பதற்கு இது மிக அழகாக இருக்கிறது. அதில் அலுமினியம் சேசிஸ் உள்ளதால் இதில் எளிதாக கீறல் விழாது. இதில் உள்ள சிறப்பு அம்சங்களும் மிக அட்டகாசமாக உள்ளன.

யு56இ-பிபிஎல்6 மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் இயங்கு தளத்தைக் கொண்டு வருகிறது. இதன் ப்ராசஸர் இண்டல் கோர் ஐ5-2430எம் ப்ராசஸர் கொண்டு 2.4ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸிங் வேகம் கொண்டுள்ளதால். இதன் செயல் திறனும் மிக அதிரடியாக இருக்கும்.

இதன் 6ஜபி ரேம் 750ஜிபி சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது. இதன் 15.6 இன்ச் டிஸ்ப்ளை 1366*768 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. இந்த அகன்ற திரை எல்இடி பேக்லிட் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதன் எடை 5.51பிஎஸ் ஆகும். மேலும் இது இன்டல் எச்டி க்ராபிக்ஸ் 3000 க்ராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளதால் க்ராபிக்சிலும் இது அட்டகாசமாக இருக்கும்.

யு56இ-பிபிஎல்6 மல்டி பார்மட் சப்போர்ட்டுடன் 2 லேயர் தொழில் நுட்ப டிவிடி பர்னர் கொண்டு வருவதால் சிடிகள் மற்றும் டிவிடிக்களை ப்ளே செய்ய முடியும். அதே நேரத்தில் அவற்றை ரைட் செய்யவும் முடியும். தரமான ஒலி அமைப்பிற்காக ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளன.

அதுபோல் இது 0.3 மெகா பிக்சல் கொண்ட வெப்காமும் கொண்டுள்ளதால் இதில் வீடியோ சேட்டிங் மிக அருமையாக உள்ளது. இதன் எச்டிஎம்ஐ அவுட்புட் போர்ட்டும் தரமான இணைப்பையும் வழங்குகிறது. மேலும் ஒரு யுஎஸ்பி 3.0 போர்ட்டையும் 2 யுஎஸ்பி 2.0 போர்ட்டுகளையும் வழங்குகிறது.

யு56இ-பிபிஎல்6 ஒரு ஹெட்போன் ஜாக்கையும் மற்றும் ஒரு மைக்ரோ போன் ஜாக்கையும் கொண்டுள்ளது. அதுபோல் இது இண்டல் 4ஜி வைமேக்ஸ் நெட்வொர்க்கிங் சிப்செட் மூலம் 802.11 பி/ஜி/என் இணைப்பையும் வழங்குகிறது.

இந்த புதிய லேப்டாப் 8 செல் லித்தியம் அயன் பேட்டரியை வழங்குவதால் இந்த அதிக பேட்டரி பேக்கப்பையும், நீண்ட ஸ்டேண்ட்-பை டைமையும் கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப் ஒரு வருட உத்திரவாதம் கொண்டு வருகிறது. இந்த யு56இ-பிபிஎல்6 லேப்டாப்பின் விலையைப் பார்த்தால் அது ரூ.29000 ஆகும். மேலும் இதில் கட்டிங் எட்ஜ் வசதியையும் கொண்டு வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X