Home
Computer

புதிய நெட்புக்குகளை அறிமுகப்படுத்தியது அமிகா

By Super
புதிய நெட்புக்குகளை அறிமுகப்படுத்தியது அமிகா
நாளுக்கு நாள் படிப்படியாகத் தொழில் நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. அதே நேரத்தில் உலகத்தில் உள்ள கடைக் கோடி மனிதன் வரையிலும் அந்த தொழில் நுட்பம் சென்றடைகிறது. அந்த விதத்தில் பார்க்கும் போது ஸ்மார்ட்போன்கள், டேப்லட்டுகள், லேப்டாப்புகள் மற்றம் மேசை கனிணிகள் ஆகியவை தொழில் நுட்பத்தில் வளர்ந்து புதிய சிபியு புதிய ப்ராசஸர் மற்றும் புதிய இயங்குதளங்களுடன் வருகின்றன. அப்படிப்பட்ட புதிய நவீன் ப்ராசஸர்களை வழங்குவதில் அமிகா நிறுவனமும் முன்னனியில் இருக்கின்றது.

இந்த மாதம் நடந்த அமிவெஸ்ட் நிகழ்வில் அமிகாஒன் எக்ஸ்1000 என்ற கனிணியைச் சார்ந்த பவர்பிசி ஆர்கிடெக்சர் மற்றும் அமிகா நெட்புக் (லேப்டாப்) ஆகியவை அறிவிக்கப்பட்டன. இந்த எக்ஸ்1000 மேக் அல்லது ஐஒஎஸ் ஆப்பிள் ப்ராசஸரில் இயங்காத டிவைஸ் ஆகும். இது புதிய அமிகாஒஎஸ்4 இயங்கு தளத்தில் இயங்குகிறது.

மேலும் இது செனோ கோப்ராசஸர் மற்றும் பிஎ செமி பவர் பிசி ப்ராசஸர் கொண்டுள்ளது. இந்த அமிகாஒன் எக்ஸ்1000 எ-இயோன் தொழில் நுட்பம் சிவிபிஎ மற்றும் ஹைபீரியன் என்டர்டைன்மென்ட் இவற்றின் கூட்டு ஒப்பந்தத்தில் வர இருக்கிறது.

அமிகாஒன் எக்ஸ்1000ன் விலை அதிகமாக இருக்கும். ஆனால் இதன் செயல் திறன் மிக வேகமாகவும் அதே நேரத்தில் அமிகாவின் அத்தனை நவீன தொழில் நுட்பங்களையும் கொண்டு வருகிறது. அதனால் இதன் விலை ரூ.131035லிருந்து ஆரம்பமாகிறது. மேலும் இதற்கு தனியாக வரி மற்றும் போக்குவரத்து மற்றும் அமிகா ஒஎஸ்4 இயங்குதளத்திற்கான உரிமம் ஆகிய செலவை நாம்தான் செலுத்த வேண்டும்.

அமிகாஒன் எக்ஸ்1000ன் ஹார்ட்வேர் கருப்பு அல்லது வெள்ளை போயிங் பாலோடு நெமோ மாடல் மதர் போர்டைக் கொண்டுள்ளது. மேலும் இது 1ஜிபி டிடிஆர்2 ரேம், 500ஜிபி எச்டிடி மற்றும் ரேடியோன் எச்டி4650 க்ராபிக்ஸ் கார்டையும் கொண்டுள்ளது.

அதுபோல் ஆடியோ மற்றும் எர்த்நெட் கார்டுகள் மற்றும் டிவிஆர் ஆர்/டபுள்யு ஆப்டிக்கல் ட்ரைவையும் கொண்டுள்ளது. அதுபோல் டூவல் பூட்டிங்குடன் ப்ரீ இன்ஸ்டால்டு டெபியான் ஸ்க்வீஸ் மற்றும் அமிகாஒஎஸ்4 இயங்கு தளத்தையும் கொண்டுள்ளது. மேலும் புதுப்பிக்கப்பட்ட எச்டிடி மற்றும் ஆப்டிக்கல் ட்ரைவ், ரேம், போயிங் பால் மவுஸ் மற்றும் கீபோர்ட் ஆகியவையும் உள்ளன. இந்த அமிகாஒன் எக்ஸ்1000 கனிணிகள் இந்த கிறிஸ்மஸ் காலத்தில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

இணைப்பு வசதிக்காக யுஎஸ்பி 2.0 போர்ட்டுகல், எஸ்எடிஎ 2 கனக்டர்கள் மற்றும் டிடிஆர்2 ரேம் ஸ்லாட் ஆகியவை இதில் உள்ளன. அதுபோல் அமிகா ஒஎஸ்4 இயங்குதளத்தில் இயங்கக்கூடிய அமிகா பவர்பிசி ஆர்கிடெக்சர் நெட்புக்கையும் அமிகா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த நெட்புக் 2012 ஆம் ஆண்டில் மத்தியில் சந்தைக்கு வரும் என்று நம்பலாம். இதன் விலை ரூ.14,623லிருந்து ரூ.24,372க்குள் இருக்கும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X