மலிவு விலையில் உயர்தரம் வாய்ந்த தோஷிபா நோட்புக்

தோஷிபா சேட்டிலைட் சி665/008 வீடியோ கேம் விரும்பிகளுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இதன் திரை 15.6 இன்ச் அளவைக் கொண்டுள்ளது. இது என்விடியா ஜிஇபோர்ஸ் 315 எம் மற்றும் 1ஜிபி க்ராபிக்ஸ் கொண்டுள்ளதால் க்ராபிக்ஸ் வேலைகளுக்கு இந்த நோட்புக் சிறப்பாக இருக்கும்.
மேலும் இதில் க்ரோபிக்ஸோடு சேர்த்து வீடியோ கேம் விளையாடினாலும் இந்த நோட்புக்கைப் பாதிக்காது. இதன் ரிசலூசன் மிக அட்டகாசமாக இருக்கிறது. ஏனெனில் இது 2ஜி ஐ5 மற்றும் 2.3 ஜிஹெர்ட்ஸ் சிபியு கொண்டுள்ளது. அதுபோல் இதன் ரேம் 4ஜிபி ஆகும். அதுபோல் இதன் ஹார்ட் டிஸ்க் 640 ஜிபி எச்டிடியைக் கொண்டுள்ளது. அதனால் தோஷிபா சேட்டிலைட் சி665/008ன் வேகம் தாறுமாறாக இருக்கும். அதே நேரத்தில் இதன் சேமிப்பு வசதியும் மிக அதிகமாக உள்ளது.
மற்ற வசதிகளைப் பார்த்தோமானால் தோஷிபா சேட்டிலைட் சி665/008ல் டிவிடி பர்னர் மற்றும் வெப்காம் வசதியையும் கொண்டிருக்கிறது. இந்த வெப்காம் மூலமாக வீடியோ கான்பரன்சிங் மற்றும் வீடியோ சாட்டிங் செய்வது சிறந்த அனுபவத்தைத் தரும். தகவல் பரிமாற்றத்திற்காக இது வைபை மற்றும் ப்ளூடூத் இணைப்பையும் வழங்குகிறது. அதுபோல் இதன் பேட்டரியும் நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளது.
தோஷிபா சேட்டிலைட் சி665/008ன் எடை 2.54 கிலோவாகும். அதனால் இதை மிக எளிதாக எங்கும் எடுத்துச் செல்ல முடியும். இதன் விலையைப் பார்த்தால் ரூ. 45000க்குள் இருக்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications