Home
Computer

இந்திய சந்தையில் களமிறங்கும் 2 புதிய டேப்லட்டுகள்

By Super
இந்திய சந்தையில் களமிறங்கும் 2 புதிய டேப்லட்டுகள்
7 இன்ச் டேப்லட்டுகளை தயாரிப்பதில் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த வகையில் இப்போது தோஷிபாவின் 7 இன்ச் வெர்சனும் அதுபோல் சாம்சங்கின் காலக்ஸி 7 இன்ச்சும் கடுமையான போட்டியில் இருக்கின்றன. இரண்டுமே கேண்டிபாரைக் கொண்டிருக்கின்றன. அதுபோல் இரண்டுமே ஏராளமான வசதிகளையும் வழங்குகின்றன.

சாம்சங் காலக்ஸி டேப் 7.0 மற்றும் தோஷிபா த்ரைவ் 7 ஆகிய இரண்டும் 7.0 இன்ச் கொண்ட பெரிய திரைகளைக் கொண்டிருக்கின்றன. அதுபோல் தொடு வசதியும், மல்டி டச் வசதியும் மேலும் ப்ராக்சிமிட்டி சென்சாரும் கொண்டுள்ளன.

ரிசலூசனைப் பொருத்தமட்டில்தான் இரண்டுக்கும் சிறு வித்தியாசம் உள்ளது. அதாவது சாம்சங் காலக்ஸி டேப் 7.0ன் திரை 1024 X 600 ரிசலூசனையும் அதே நேரத்தில் தோஷிபா த்ரைவ் 7 1280 X 800 ரிசலூசனையும் கொண்டுள்ளன.

இயங்குதளத்தைப் பொறுத்தவரை சாம்சங் காலக்ஸி டேப் 7.0 மற்றும் தோஷிபா த்ரைவ் 7 ஆகியவை ஆன்ட்ராய்டு 3.2 தளத்தையும் மற்றும் டூவல்கோர் 1200எம்ஹெர்ட்ஸையும் கொண்டுள்ளன. ஒரே வித்தியாசம் என்னவெனில் தோஷிபா 1000 எம்ஹெர்ஸை கொண்டுள்ளது.

கேமரா வசதியைப் பார்த்தால் சாம்சங் காலக்ஸி டேப் 7.0 மற்றும் தோஷிபா த்ரைவ் 7 ஆகியவை சற்று மாறுபடுகின்றன. அதாவது சாம்சங் 3 மெகா பிக்சல் கேமரா மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் தோஷிபா 5 மெகா பிக்சல் கேமாரவைக் கொண்டுள்ளது. அதனால் தோஷிபாவின் கேமரா பட்டையைக் கிளப்பும். அதுபோல் ஆட்டோ போக்கஸ் மற்றும் ஸ்மைல் டிடக்சன் கொண்ட 2 மெகா பிக்சல் கொண்ட முகப்பு கேமராவை இரண்டுமே கொண்டுள்ளன.

சாம்சங் காலக்ஸி டேப் 7.0 மற்றும் தோஷிபா த்ரைவ் 7 ஆகியவற்றின் இணைப்பு வசதியைப் பார்த்தால் இரண்டுமே ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி போர்ட்டுகள் மற்றும் வைபை வசதியைக் கொண்டுள்ளன. அதுபோல் இந்த இரண்டின் பேட்டரிகளும் நீண்ட ஆயுளைக் கொண்டவை.

சாம்சங் காலக்ஸி டேப் 7.0 மற்றும் தோஷிபா த்ரைவ் 7 ஆகியவை தரமான போர்ட்புள் டிவைஸ்களாகும். சாம்சங்கின் விலை ரூ.20000லிருந்து ரூ.25000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தோஷிபாவின் விலை சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X