வியாபாரத்திற்கும் அலுவலகத்திற்கும் பயன்படும் புதிய லேப்டாப்

Posted By: Staff

வியாபாரத்திற்கும் அலுவலகத்திற்கும் பயன்படும் புதிய லேப்டாப்
கணினி மற்றும் லேப்டாப் சந்தையில் முன்னணி நிறுவனமான லெனோவா ஒரு புதிய லெனோவா திங்பேட் எக்ஸ்121இ என்ற வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கான புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த லேப்டாப் பல புதிய நவீன தொழில் நுட்பங்களுடன் வந்திருக்கிறது. இதன் டிஸ்ப்ளே பார்ப்பதற்கு அருமையாக 11.6 இன்ச் அளவில் 1366 X 768 பிக்ஸல் ரிசலூசனுடன் வருகிறது. அதனால் அதில் படங்களும் காட்சிகளும் மிகத் தெளிவாக இருக்கும். மேலும் இதன் டிஸ்ப்ளே எல்இடி பேக்லிட் எல்சிடி எச்டி டிஎப்டி தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது.

லெனோவா எக்ஸ்121இ இன்டல் கோர் ப்ராசஸர் அல்லது எஎம்டி டூவல் கோர் ப்ராசஸர் இ-350 கொண்டு வரும். அதுபோல் இதில் இன்டல் எச்டி 3000 க்ராபிக்ஸ் அல்லது ரேடியோன் எச்டி 6310 க்ராபிக்ஸ் மெமரி கார்டு உள்ளது. இதன் 4ஜிபி ரேம் 8ஜிபி டிடிஆர்3 வரை விரிவுபடுத்தக்கூடிய மெமரியைக் கொண்டுள்ளது. இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் அல்லது விண்டோஸ் 7 ப்ராபசனல் இயங்குதளத்தைக் கொண்டிருக்கும். இதன் ஹார்ட் ட்ரைவ் 320ஜிபி கொண்டுள்ளது.

லெனோவா எக்ஸ்121இ 1.55 கிலோ எடையைக் கொண்டுள்ளதால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். அதுபோல் இதன் தடிமன் 27.3மிமீ ஆகும். இதன் 4இன்1 மீடியா கார்ட் ரீடர் தரமான மல்டிமீடியா அனுபத்தை வழங்குகிறது. இதன் யுஎஸ்பி 2.0 போர்ட் தரமான யுஎஸ்பி இணைப்பையும் வழங்குகிறது. அதுபோல் இதில் ப்ளூடூத் மற்றும் 802.11 பி /ஜி/என் வைபை இணைப்பும் மிக அபாரமாக உள்ளன. அதுபோல் இதில் எச்டிஎம்ஐ அவுட்புட் போர்ட் இணைப்பும் உள்ளது.

லெனோவா எக்ஸ்121இன் கீபோர்ட் டைப் செய்வதற்கும் மிக இலகுவாக உள்ளது. இதன் 0.3 மெகா பிக்சல் வெப்காம் மூலம் சிறந்த வீடியோ சாட்டிங் அனுபவத்தைப் பெற முடியும். இதன் 6 செல் ரிமூவபுள் லித்தியம்-ஐயன் பேட்டரி 8.2 மணிநேர டாக்டைமை வழங்குகிறது.

லெனோவா எக்ஸ்121இன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதன் விலை வியாபார மற்றும் வேலை செய்பவர்களுக்கு ஏற்ற லேப்டாப்பின் விலையை ஒத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்