நவீன தொழில்நுட்பங்களுடன் ஆர்கோஸ் டேப்லெட்

By Super
|
நவீன தொழில்நுட்பங்களுடன் ஆர்கோஸ் டேப்லெட்
ஆர்கோஸ் நிறுவனம் கட்டிங் எட்ஜ் தொழில் நுட்பத்தில் தரமான படைப்புகளை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் ஆர்கோஸ் புதியதாக ஆர்கோஸ் ஜி9 என்ற டேப்லட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய டேப்லட் நவீன தொழில் நுட்பங்களும் மற்றும் வசதிகளும் கொண்டு வருகின்றது.

ஆர்கோஸ் ஜி9 டேப்லட்டின் டிஸ்ப்ளே 8இன்ச் அளவுடன் 1024*768 பிக்சல் ரிசலூசனுடன் வருகிறது. இது ஆன்ட்ராய்டு 3.2 ஹனிகோம் இயங்குதளம் கொண்டுள்ளது. மேலும் இது 1ஜிஹர்ட்ஸ் டர்போ வெர்சன் கொண்டு ஒஎம்எபி 4 ஸ்மார்ட் மல்டிகோர் எஆர்எம் கோர்டெக்ஸ் எ9 ப்ராசஸர் கொண்டுள்ளது. இதன் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதன் மெமரியை 16ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். இசன் ஹார்ட் ட்ரைவ் 250ஜிபி ஆகும்.

ஆர்கோஸ் ஜி9 டேப்லட் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேபேக் கொண்டு வருவதால் இது எம்பிஇஜி மற்றும் எம்பி3 பார்மட்டுகளை சப்போர்ட் செய்யும். அதுபோல் படங்களை ஜேபிஇஜி, ஜிஐஎப், பிஎம்பி மற்றும் பிஎன்ஜி பார்மட்டுகளில் பார்க்க முடியும்.

இதன் முகப்பு கேமரா 720பி வீடியோ ரிக்கார்டிங்கை வழங்குகிறது. மேலும் இது யுஎஸ்பி மற்றும் எச்டிஎம்ஐ அவுட்புட் போர்ட்டுகளையும் கொண்டுள்ளது. அதுபோல் இதன் ப்ளூடூத் மற்றும் வைபை 802.11 பி/ஜி/என் இணைப்பும் மிக அபாரமாக உள்ளன. இதன் இன்பில்ட் ஜிபிஎஸ் தொழில் நுட்பம் இந்த டேப்லட்டை நாவிகேட் செய்ய மிக வசதியாக இருக்கும்.

ஆர்கோஸ் ஜி9 டேப்லட்டின் எடையைப் பார்த்தால் அது அதன் மாடல்களுக்கு ஏற்ப வித்தியாசப்படுகின்றன. அதாவது ஆர்கோஸ் 80 ஜி9 ப்ளாஷ் வரிசை 465 கிராம்களில் வருகிறது. இதன் ஆர்கோஸ் 80 ஜி9 ஹார்ட் ட்ரைவ் வரிசை 599 கிராம்களில் வருகிறது.

இதிலுள்ள லித்தியம் பாலிமர் பேட்டரி 36 மணி நேர மியூசிக் ப்ளேபேக் டைமையும் 7 மணி நேர வீடியோ ப்ளேபேக் நேரத்தையும் வழங்குகிறது. அதுபோல் 10 மணி நேர இன்டர்நெட் நாவிகேசன் நேரத்தையும் வழங்குகிறது. இந்த டேப்லட்டின் விலை நியாயமாக இருக்கிறது. அதாவது இந்த ஆர்கோஸ் 80 ஜி9 டேப்லட் ரூ.16000ல் வருகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X