பன்முனை வசதிகளுடன் வரும் ஹச்பி பெவிலியன் டிவி6ஸட் எஎம்டி

இந்த ஹச்பி பெவிலியன் டிவி6ஸட் எஎம்டி லேப்டாப்பின் திரையைப் பார்த்தால் அது டயக்னல் மற்றும் உயர் டெபினிசன் கொண்டு 15.6 இன்ச் அளவு கொண்டுள்ளது. இதன் ப்ரைட்வியூவ் எல்இடி டிஸ்ப்ளே தெளிவான படங்களையும் மற்றும் காட்சிகளையும் வழங்குகின்றன.
இதன் க்வாட் தொழில் நுட்பம் தரமான் பீட் ஆடியோ அவுட்புட்டுகளையும் வழங்குகிறது. மேலும் இதில் இன்டக்ரேட்டட் ப்ளூ-ரே ரோம் ட்ரைவ் உள்ளதால் மிகத் தெளிவாக டிவிடி ரைட் செய்ய முடியும். இதன் வெப் கேமரா மூலம் வீடியோ சேட்டிங்கையும் நாம் நல்ல முறையில் செய்ய முடியும்.
குறிப்பாக ஹச்பியின் தயாரிப்புகள் அனைத்தும் மிகத் தரமாக இருக்கும். நாம் அதற்கு உத்திரவாதம் அளிக்கலாம். அந்த வகையில் இந்த புதிய ஹச்பி பெவிலியன் டிவி6ஸட் எஎம்டி லேப்டாப் எஎம்டி க்வாட் கோர் எ6-3400 முதல் 3530 எம் வரையிலான அக்ஸ்லரேசன் கொண்டுள்ளது.
க்ராபிக்ஸ் வேலைகளுக்காக எஎம்டி ரேடியோன் டிஸ்க்ரீட் க்ளாஸ் கிராபிக்கும் கொண்டுள்ளது. அதனால் க்ராபிக்ஸ் வேலைகள் மற்றும் வீடியோ கேம் ஆகியவை இதில் மிக அருமையாக இருக்கும். இதன் மெமரியைப் பார்த்தால் அது 6ஜிபி டிடிஆர்3 ஆகும்.
ஹச்பி பெவிலியன் டிவி6ஸட் எஎம்டி வாடிக்கையாளர்கள் இதைப் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கக் கூடாது என்பதற்காக விண்டோஸ் இயங்குதளமும் அதே நேரத்தில் ஹச்பி லான்ச் பாக்ஸூம் வழங்குகிறது. மேலும் இது ப்ரொட்டக்ட் ஸ்மார்ட் தொழில் நுட்பமும் கொண்டிருப்பதால் இந்த லேப்டாப்புக்கு சிறந்த புதுகாப்பும் கிடைக்கிறது. மேலும் இது கூல்சென்ஸ் தொழில் நுட்பமும் கொண்டிருப்பதால் இந்த லேப்டாப் எப்போதும் குளிர்ச்சியான நிலையிலேயே இருக்கு. அது இந்த லேப்டாப்புக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.
அடுத்ததாக இந்த ஹச்பி பெவிலியன் டிவி6ஸட் எஎம்டி லேப்டாப் சிம்பிள்பாஸ் கைரேகை ரிடர் கொண்டிருப்பதால் வெளியாட்கள் யாரும் நமது லேப்டாப்பை இயக்க முடியாத விதத்தில் நமது கைரேகையை பதிவு செய்து அதன் மூலம் நமது கைரேகை காண்பித்தால் மட்டுமே இந்த லேப்டாப்பை திறக்க முடியும்.
அந்த அளவிற்கு இந்த லேப்டாப் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. தகவல்களை மேலாண்மை செய்ய மாறுபட்ட பல அளவுகளில் பல போர்ட்டுகள் உள்ளன. இதன் இன்டக்ரேட்டட் வைபை மற்றும் ப்ளூடூத் வசதி இந்த லேப்டாப்புக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
இந்த ஹச்பி பெவிலியன் டிவி6ஸட் எஎம்டி லேப்டாப்புடன் 5 இலவச ஹச்பி விளையாட்டுகளும் அதே நேரத்தில் 60 நாட்கள் இலவச ஆண்டி வைரஸ் வசதியையும் வழங்குகிறது. மேலும் நோர்டன் இன்டர்நெட் செக்யூரிட்டி இலவசமாக வழங்கப்படுகிறது. இத்தனை வசதிகளுடன் வரும் இந்த ஹச்பி பெவிலியன் டிவி6ஸட் எஎம்டி லேப்டாப்பின் விலையப் பார்த்தால் இது ரூ.40,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications