Home
Computer

அனைத்து வசதிகளுடன் எச்பி வழங்கும் புதிய கம்ப்யூட்டர்

By Super
அனைத்து வசதிகளுடன் எச்பி வழங்கும் புதிய கம்ப்யூட்டர்
அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய புதிய எச்பி காம்பேக் 8200 எலைட் என்ற கணனியை எச்பி நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது நவீன தொழில் நுட்பம் கொண்ட டெஸ்க்டாப் கணனியாகும்.

எச்பி காம்பேக் 8200 எலைட் மற்ற கணினிகளைப் போல் இருந்தாலும் இது 2ஜிகாஹெர்ட்ஸ் இன்டல் கோர் ப்ராஸஸரை பெற்றுள்ளது. அதனால் இதை இயக்குவது மிகவும் சௌகரியமாக இருக்கும். இந்த புதிய கணனி விப்ரோ நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிறந்த செக்யூரிட்டி வசதிகளை பெற்றுள்ளது.

ஒரு வேளை இந்த கணினியில் உள்ள தகவல்களை தெரியாதவர்கள் யாரோ திருடுகிறார்கள் என்று தெரிந்தால் இன்டர்நெட் மூலமாக அதன் ஹார்டு டிஸ்க்கில் உள்ள தகவல்களை அழிக்கவோ மறைக்கவோ முடியும். மேலும் ரிமோட் வசதியும் இந்த கணனியில் உள்ளது.

எச்பி காம்பாக் 8200 எலைட்டை ஒரு சுப்பீரியர் கணினி என்று அழைக்கலாம். அந்த அளவிற்கு நிறைந்த வசதிகளை வழங்குகிறது. இதனுடைய 23 இஞ்ச் திரை எச்டி சப்போர்ட்டை வழங்குகிறது. இதன் ஹச்டி டபுள்யுஎல்இடி எல்சிடி திரை 1920 X 1080 பிக்ஸல் ரிசலூசனை தருவதால் இதைப் பார்ப்பதற்கே மிக ரம்மியமாக இருக்கும்.

இன்டல் கோர் ஐ7-2600 2.80ஜிகாஹெர்ட்ஸ் ப்ராசஸர் மற்றும் 8ஜிபி ரேமை பெற்றிருப்பதால். தகவல் பரிமாற்ற வேகத்தில் பின்னி எடுக்கும். மிதமிஞ்சிய அளவு தகவல்களை சேமிக்கும் வகையில் 160ஜிபி ஹார்டு டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், கிராபிக் வசதியை வழங்கும் வகையில் ஒருங்கிணைந்த இன்டல் ஹைடெபினிஷன் கிராபிக் 3000 பிராசஸர் உள்ளது.

மற்ற வசதிகளை பொறுத்தவரை வீடியோ சாட்டிங் வசதிக்காக 1.3 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தனியாக மைக்ரோபோனை் மற்றும் ஹெட்போன் பொருத்தும் போர்ட்களையும் கொண்டிருக்கிறது. எச்பி காம்பாக் 8200 எலைட் 6 யுஎஸ்பி போர்ட்களின் 2.0 வெர்ஷன்களை வழங்குகிறது. ஹோம் தியேட்டரை இணைக்க தனியாக ஸ்பீக்கர் ஜாக்கும் உண்டு.

மேலும் இது 6 ஒன் கார்ட் ரீடரையும் ஒரு மினி பிசிஐஇ எக்ஸ் ஸ்லாட்டும் இருக்கிறது. எச்பி காம்பேக் 8200 எலைட் விப்ரோ சப்போர்ட்டுடன் வைபை வசதியும் பெற்றுள்ளது. ரூ.45,644 கம்ப்யூட்டர்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X