சகல தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் புதிய லெனோவா லேப்டாப்

Posted By: Staff

சகல தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் புதிய லெனோவா லேப்டாப்
லெனோவாவின் புதிய லெனோவா எஸ்ஸன்சியல் பி-470 ஒரு சிறந்த வேப்டாப் ஆகும். ஏனெனில் இது உயர்ந்த கான்பிகரேஷன்களோடு வருகிறது. இப்பொழுது வரும் லேப்டாப்புகள் எல்லாம் சிறந்த கான்பிகரேஷன்களோடு வருகின்றன. அதனால் எதை வாங்குவது என்ற குழப்பம் மக்கள் மத்தியில் இருக்கிறது.

அதற்கான கேரண்டியை லெனோவா எஸ்ஸன்சியல் பி-470 கண்டிப்பாக வழங்கும். ஏனெனில் இது மெகா சக்தி கொண்ட 2.3கஜிஹெர்ட்ஸ் இண்டல் கோர் ஐ5 2410எம் ப்ராசஸர் கொண்டுள்ளது. அதனால் இதன் வேகம் மிக தாறுமாறாக இருக்கும். மேலும் இதன் மெமரியைப் பார்த்தால் இது 4ஜிபி 1,333 மெகா ஹெர்ட்ஸ் டிடிஆர்3 கொண்டிருக்கிறது.

இதன் ஹார்ட் ட்ரைவ் 5,400 ஆர்பிஎம்மில் 500ஜிபி கொண்டு இருக்கிறது. இதன் சிப்செட் இன்டல் கோடட் ஹச்எம்65 ஆகும். மேலும் இது என்விடியா ஜிஇபோர்ஸ் 410எம் கொண்டிருப்பதால் க்ராபிக்ஸும் இதில் அட்டகாசமாக இருக்கும். இதன் ஓஎஸ் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் ஆகும். இதன் டிஸ்ப்ளே 14 இன்ச் கொண்ட திரையாகும்.

இதன் அமைப்பைப் பார்த்தால் இது ப்ளாஸ்டிக் மற்றும் லிட் கலந்து க்ளோசி கோட்டிங் கொண்டுள்ளது. இந்த புதிய லேப்டாப் மற்ற லெனோவா லேப்டாப்புகளை விட சற்று விலை குறைந்ததாகும்.

இதனுடைய கீபேடைப் பார்த்தால் புதியவர்கள் கூட இதில் எளிதாக வேலை செய்யலாம். அந்த அளவிற்கு இதன் கீகள் வரிசையாக அழகாக உள்ளன. இதன் தொடு தளம் மல்டி டச் வசதி கொண்டதால் இரண்டு விரலில் ஸ்க்ரோலிங் செய்யலாம்.

லெனோவா எஸ்ஸன்சியல் பி470 சிஸ்டம் பேக்கப்பிற்காக ஒரு கீ ரிகவரி 7.0 அப்ளிகேஷன் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.31,972 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்