குறைந்த எடையில் நிறைந்த வசதிகளுடன் சாம்சங் நெட்புக்

Posted By: Staff

குறைந்த எடையில் நிறைந்த வசதிகளுடன் சாம்சங் நெட்புக்
டேப்லட்டுகளைப் போல் நெட்புக்குகளுக்கும் தேவை அதிகரித்திருக்கிறது. எனெனில் நெட்புக்குகள் எடையிலும் விலையிலும் லேப்டாப்புகளை விட குறைவாக இருக்கின்றன.

நல்ல செயல் திறன் கொண்ட நெட்புக்குக்கு கண்டிப்பாக பெரிய வரவேற்பு இருக்கும். அந்த விதத்தில் சாம்சங் புதிய சாம்சங் என்சி110-எ07 என்ற புதிய ஆற்றல் வாய்ந்த நெட்புக்கை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய நெட்புக் கண்டிப்பாக அனைத்து தரப்பினரையும் எளிதாக கவர்ந்து விடும் என்று சாம்சங் நம்புகிறது.

சாம்சங் என்சி110-எ07 சக்தி வாய்ந்த 1.66 கிஹர்ட்ஸ் இண்டல் ஆட்டம் என்570 ப்ராசஸர் மற்றும் இண்டல் ஜிஎம்எ3150 இண்டக்ரேட்டட் ஜிபியு கொண்டுள்ளது. இதன் ராம் மெமரி 1ஜிபி ஆகும். மேலும் இதன் எடை மிகக் குறைவாக இருக்கும். அதனால் எளிதாக இதை எடுத்துச் செல்லலாம்.

சாம்சங் என்சி110-எ07 பார்ப்பதற்கு அழகாக இருக்கும் விதத்தில் 10.1 டிஸ்ப்ளே கொண்டு 1024X600 பிக்ஸல் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நெட்புக் சிறந்த செய்ல் திறன் கொண்டிருந்தாலும் இதில் இமெயில் சேவைகள், இண்டர்நெட் ப்ரவ்சிங் மற்றும் படங்களை எடிட் செய்வதற்கான போட்டோஷாப் போன்றவை சிறப்பானதாக இல்லை.

இந்த சாம்சங் நெட்புக் விண்டோஸ் 7 ஓஎஸ்ஸில் இயங்குகிறது. இந்த நெட்புக் மற்ற நெட்புக்குகளை விட சிறப்பாக செயல்பட்டாலும் இதை ஒரு முழுமையான கனனி என்று சொல்ல முடியாது. ஆனாலும் இது விண்டோல் 7ல் சிறப்பாக இயங்குகிறது. அதனால் நமது எதிர்பார்ப்புகளை விட அதிகமாக செயல்படும் என நம்பலாம். இதன் சேமிப்பு வசதி திருப்திகரமாக உள்ளது. அதாவது இதன் ஹார்ட் டிஸ்க் 320ஜிபி ஆகும்.

சாம்சங் என்சி110-எ07 ஒரு எடை குறைந்த நெட்புக்காகும். அதாவது இதன் எடை 1.18கிகி ஆகும். இதந் வெப்காம் மற்றும் ஒலிபெருக்கிகள் மிக சிறப்பாக உள்ளன. அதே போல் இதன் எஸ்ஆர்எஸ் 3டி ஒலி அமைப்பும் அம்சமாக உள்ளது. சிவப்பு வண்ணத்தில் வரும் இந்த புதிய சாம்சங் என்சி110-எ07 ரூ.15,000க்கு கிடைக்கும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot