Home
Computer

அதிக சேமிப்பு திறனுடன் புதிய லேப்டாப்: எச்பி அறிமுகம்

By Super
அதிக சேமிப்பு திறனுடன் புதிய லேப்டாப்: எச்பி அறிமுகம்
எச்பி கனிணி மற்றும் லேப்டாப் தயாரிப்பில் சிறப்பு பெற்ற ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். சாப்டேவர் அப்ளிகேசன் மற்றும் அதன் ஆராய்ச்சியில் இதன் பங்கு மகத்தானது ஆகும்.

இதன் தொடர்ச்சியாக உலகச் சந்தையில் எச்பி பெவிலியன் டிவி7-6101எஸ்எ என்ற தனது புதிய தயாரிப்பை களமிறக்குகிறது. இந்த லேப்டாப் மிகவும் அழகாக உள்ளது. அதே நேரத்தில் மலிவான விலையிலும் வந்துள்ளது.

எச்பி பெவிலியன் டிவி7-6101எஸ்எவின் செயல் திறன் மிக அபாரமாக இருக்கும். ஏனெனில் அது எஎம்டி எ4 ப்ராசஸர் கொண்டுள்ளது. அதனால் அது 2.1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸிங் வேகத்தில் இயங்கும். அதுபோல் இதன் மெமரி திறன் 6ஜிபி ஆகும்.

மேலும் இது 2 மெமரி ஸ்லாட்டுகளுடன் வருகிறது. இதன் மெமரியை 8ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். இதன் எடை 3 கிலோவாகும். அதனால் இதை எளிதாக எங்கும் எடுத்துச் செல்ல முடியும். இதன் டச்பேடும் மிக அருமையாக உள்ளது.

எச்பி பெவிலியன் டிவி7-6101எஸ்எ 17.3 இன்ச் திரை ட்ஸ்ப்ளே கொண்டு அது 1600*900 பிக்ஸல் ரிசலூசனை வழங்குகிறது. அதுபோல் இதில் 720பி டெபெனிசன் வீடியோ ரிக்கார்டிங் வசதியும் உண்டு. க்ராபிக்ஸ் வசதிக்காக எச்டிஎம்ஐ போர்ட்டுகளும் இதில் உண்டு.

மேலும் இதில் எஎம்டி ரேடியோன் எச்டி 6515ஜி2 க்ராபிக்ஸ் ப்ராசஸர் உள்ளது. அதுபோல் இதில் 512ஜிபி க்ராபிக்ஸ் மெமரியும் உள்ளது. இதன் மொத்த சேமிப்பு வசதி 1000ஜிபி ஆகும். மேலும் இன்டர்னல் டிவிடி ரிரைட்டரும் கொண்டிருக்கிறது. அதுபோல் 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் மல்டி பார்மட் மெமரி கார்ட் ரீடரும் இதில் உள்ளது. இதில் உள்ள பீட்ஸ் ஆடியோ ஸ்பீக்கர் அதிரடியான இசையை வழங்குகின்றன.

எச்பி பெவிலியன் டிவி7-6101எஸ்எ விண்டோஸ் ப்ரீமியம் 64-பிட் இயங்கு தளத்தில் இயங்குகிறது. இதில் உள்ள 4 யுஎஸ்பி போர்ட்டுகளும் தரமான யுஎஸ்பி இணைப்பை வழங்குகின்றன. மேலும் இதில் ப்ளூடூத் மற்றும் 802.11என் வைபை இணைப்பும் உண்டு.

எஸ்டிஎகஸ்சி மற்றும் எம்எம்சி மெமரி கார்டுகள் இந்த லேப்டாப்பை அலங்கரிக்கின்றன. அடுத்ததாக இதில் மினி ஜாக் ஆடியோ அவுட்புட்டும் அதுபோல் மினி ஜாக் மைக்ரோபோன் இன்புட்டும் இதில் உள்ளன. இதில் உள்ள சாப்ட்வேர் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 ஸ்டார்ட்டர் எடிசனைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் 1 வருட உத்திரவாதம் கொண்டு வருகிறது. இதன் விலையைப் பார்த்தால் ரூ.43500 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X