இரட்டை திரை கொண்ட புதிய கனோவா லேப்டாப்

Posted By: Staff

இரட்டை திரை கொண்ட புதிய கனோவா லேப்டாப்
அடுத்த தலைமுறை அம்சங்களுடன் இரட்டை திரை வசதிகொண்ட கனோவா-2 லேப்டாப்பை அறிமுகப்படுத்த இத்தாலியை சேர்ந்த வெலெரியோ ஆயத்தமாகி வருகிறது.

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு டூவல் திரை கொண்ட லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அவை ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் பார்க்கப்பட்டன. ஏனெனில் அது மற்ற சாதாரண லேப்டாப்புகளிலிருந்த மாறுபட்டு காணப்பட்டது.

இந்த டூவல் திரை கொண்ட லேப்டாப்புக்கு மூலக்காரணமாக இத்தாலியின் வெலேரியோ கமிட்டி கூறப்படுகிறது. மின்னணு சாதனங்கள் வடிவமைப்பில் பிரசித்திபெற்ற வி12 டிசைன் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த லேப்டாப்பை வடிவமைத்ததில் வெலெரியோ கமிட்டி தலைவர் முக்கிய பங்கு வகித்தார். கனோவா என்று பெயரிடப்பட்ட இந்த லேப்டாப் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. ஆனால், வர்த்தக ரீதியில் அவை பெரிய அளவில் வெற்றிபெற வில்லை.

இந்த நிலையில், 2ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும் வசதியுடன் இரண்டாம் தலைமுறை கனோவா லேப்டாப்பை விரைவில் அறிமுகப்படுத்த வெலெரியோ ஆயத்தமாகியுள்ளது. முதல் கனோவா டூவல் தொடுதிரையுடன், ஒரு ஸ்கெட் பேட் கொண்டு எல்க்ட்ரானிக் பேனா கொண்டு எழுதும் எழுது பலகையும் கொண்டு வந்தது.

ஆனால், புதிய 2ஜி கனோவா சாதாரண புத்தகங்களை பக்கங்களை புரட்டி படிப்பது போன்று இ-புக்குகளை படிக்கும் அற்புத வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கனவோ-2 குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும், இது அமெரிக்க நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பழைய கனோவாவின் திரையில் கீபோர்ட் திரையில் தெரியும். அது சாதாரண கீபோர்டை போன்று டைப் செய்வதற்கு சிறப்பானதாக இல்லை. இதனால், அந்த மாடல் வெற்றிப்பெறவில்லை. ஆனால் புதிய கனோவாவில் இந்த குறை நிவர்த்தி செய்யப்படும் என நம்பலாம். இந்த புதிய லேப்டாப் அதி நவீன வசதிகளுடன் மல்டி டச் யூனிட்டுடன் வரும். மேலும் இந்த புதிய லேப்டாப் மைக்ரோபோன் யூட்டிலிட்டிகள் கொண்டு வரும்.

இதன் மின்திறனும் அசாத்திய திறமை கொண்டது. இதன் டிஸ்ப்ளே 1280 X 1024 ரிசலூசனை வழங்குகிறது. மேலும் இதன் சேமிப்பு வசதியும் கூடுதலாக இருக்கும் என்பதால் தகவல்களை சேமித்து வைப்பது குறித்து கவலை இருக்காது. புதிய கனோவாவில் ஸ்கெட்சிங் வசதியும் மிக அருமையாக உள்ளது. மேலும் இதில் போட்டோஷாப் வேலைகளை எளிதாக செய்யலாம். இதன் விலை பற்றிய அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஆனால் இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot