Home
Computer

இலகு எடையுடன் புதிய நெட்புக்கை அறிமுகப்படுத்தியது ஆசஸ்

By Super
இலகு எடையுடன் புதிய நெட்புக்கை அறிமுகப்படுத்தியது ஆசஸ்
சிறந்த கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் போன்களையும், லாப்டாப்களையும் மற்றும் நோட்புக்குகளையும் வழங்கும் ஆசஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், குறைந்த தடிமன், இலகு எடையுடன் கூடிய புதிய நெட்புக்கை பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது.

ஆசஸ் எக்ஸ்-101 என்ற குறியீட்டு பெயரில் வந்துள்ள இந்த புதிய நெட்புக் எக்ஸ்-101ஒரு கிலோ எடையுடன் 17.6எம்எம் தடிமனும் கொண்டது. இந்த நெட்புக் மொபைல் கம்ப்யூட்டிங் செய்வதற்கு எளிதாக இருக்கும். இது தோற்றத்திலும் எடையிலும் குறைவாக இருந்தாலும் இதையொத்த மற்ற லாப்டப்புகளை விட சிறந்த பல வசதிகளை கொண்டுள்ளது.

ஆசஸ் எக்ஸ்-101 ஸ்டைலான 10.1 இஞ்ச் மானிட்டர் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. மேலும் இது எல்இடி பாக்லிட் மானிட்டருடன் வந்துள்ளது. இந்த நெட்புக்கின் ப்ளூடூத் 3.0 சிறந்த தொடர்புக்கு உதவியாக இருக்கும். மேலும் இதனுடைய கீபோர்டில் வேலை செய்வது சிறந்த அனுபவமாக இருக்கும்.

ஆசுஸின் புதிய நெட்புக் எக்ஸ் 101 எஸ்ஹச்இ என்று அழைக்கப்படுகின்ற சூப்பர் ஹைப்ரீட் எஞ்சினால் ஆன சிறந்த செயல்திறன் கொண்ட ப்ராஸஸரையும் பெற்றிருக்கிறது. இது பேட்டரியின் நீண்ட உழைப்புக்கு காரணமாயிருக்கிறது.

மேலும் இந்த நெட்புக் ட்ராப் பாக்ஸ் என்று சொல்லப்படுகின்ற க்ளவுட் சேமிப்பை பெற்றிருப்பதால் க்ளவுட் மூலம் ஸின்க் பைல்ஸ் செய்வது மிகவும் எளிது. மேலும் இதில் பைல்களை எடிட் செய்வது மற்றும் மாற்றுவதும்எளிதாக இருக்கிறது.

ஆசஸின் இந்திய தலைவர் அலெக்ஸ் ஹூவாங் கூறும் போது,"ஆசஸின் புதிய நெட்புக் எக்ஸ்-101 வாடிக்கையாளர்களின் மன நிலையையும் வாழ்க்கை முறையையும் பிரதிபலிப்பதாக இருக்கும் என்கிறார். மேலும் இது லேப்டாப் உலகில் இது ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கும் என்று கூறினார்.

இன்டல் நிறுவனத்தின் குழுமத்தின் வர்த்தகப்பிரிவு இயக்குனர் பிராசாந்த் ஆதிராஜூ கூறும் போது தங்களது வியாபார கூட்டாளியான ஆசஸுடன் இணைந்து பல சிறந்த படைப்புகளை மலிவு விலையில் அறிமுகம் செய்யப்போவதாக தெரிவித்தார். அந்த கூற்றை நிரூபிக்கும் வகையில் இந்த ஆசுஸின் புதிய நெட்புக் எக்ஸ்-101 ரூ.12,499 விலைக்கு கிடைக்கவிருக்கிறது.

முதல் பார்வையிலேயே ஆசஸின் புதிய நெட்புக் எக்ஸ்-101 சிறந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், இதில் விரைவான யூசர் இன்டர்பேஸ் இருக்கும் என நம்பலாம். அதேபோல் இது இமெயில், சோஷியல் நெட்வொர்க்கிங் போன்ற பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X