Just In
- 9 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 9 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 10 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 11 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்த ஆண்டின் சிறந்த ஆன்ட்டி வைரஸ் இதுதான்...!
தற்போது நாம் எந்த கம்பியூட்டரை பயன்படுத்தினாலும், அதற்கு ஆன்ட்டி வைரஸ் தான் முதல் தேவையாக உள்ளது.
மேலும் இது இணையம் வழியாகவும், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் வழியாகவும் வரும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களைத் தடுத்து நிறுத்தி, அவற்றின் மோசமான நடவடிக்கை களிலிருந்து நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் அரணாக ஆன்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்படுகின்றன.
இதனாலேயே, பல நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் ஆன்ட்டி வைரஸ் புரோகிராம்களின், எளிய, ஆனால், பயன்மிக்க பதிப்புகளை இலவசமாக இணையத்தில் வழங்குகின்றன.
பெரும் நிறுவனங்கள் பயன்படுத்தும் ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகளையும், நம்மைப் போன்ற நுகர்வோர்கள் பயன்படுத்தும் ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகளையும் எடுத்து ஆய்வு செய்தபோது இங்கு நுகர்வோர்கள் பயன்படுத்தும் ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகளின் செயல்பாடு குறித்து சில உண்மைகள் கண்டறியப்பட்டன.
இந்த சோதனைகள் அனைத்தும் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பு, செயல்பாடு மற்றும் பயன்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இவை சோதனை செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. 0 முதல் 18 வரை மதிப்பெண் அளவு வைத்துக் கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு என்பது, எந்த அளவிற்க்கு இந்த புரோகிராம்கள், வைரஸ் மற்றும் மால்வேர்களை முழுமையாகத் தடுத்து நிறுத்தின என்ற அடிப்படையில் காணப்பட்டது.
6 மதிப்பெண் வாங்கியவை முழுமையாக இவற்றைத் தடுத்து நிறுத்தின. செயல் திறன் என்பது, கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் இவை இயங்கும் வேகம் குறித்தது. பயன்நிலை என்பது அவை நுகர்வோருக்கு எந்த அளவில் பயன்படுகின்றன என்ற அளவில் அறியப்பட்டது ஆகும்.
இவற்றில் பிட்டிபன்டர் இன்டர்நெட் செக்யூரிட்டி 2014 (Bitdefender Internet Security 2014) 18 மதிப்பெண்கள் பெற்று, முதல் இடத்தைப் பெற்றது. இதே நிலையில் 18 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை கேஸ்பர்ஸ்கை 2014(Kaspersky Lab Internet Security 2014) பெற்றுள்ளது.
அடுத்ததாக அவைரா 2014(Avira Internet Security 2014), 17.5 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது. இதற்கு அடுத்து F செக்யூர் 2014 (FSecure Internet Security 2014 (16.5)), BullGuard Internet Security 14.0 (15.5), Trend Micro Titanium Maximum Security 2014 (15.5), Panda Security Cloud Antivirus FREE 2.3 (15.5), AVG Antivirus Free Edition 2014 (15), Symantec Norton Internet Security 2014 (15), McAfee Internet Security 2014 (14.5), ஆகியவை இடம் பெறுகின்றன.
பிட்டிபன்டர் மற்றும் கேஸ்பர்ஸ்கை ஆகிய இரண்டும் முழு மதிப்பெண்கள் பெற்று, மிகச் சிறந்த ஆன்ட்டி வைரஸ் புரோகிராம்களாக இடம் பெற்றுள்ளன. சில பாதுகாப்பு வழங்குவதில் முழு மதிப்பெண்கள் பெற்றாலும், அவை சிஸ்டம் இயங்குவதில் சிக்கலை உண்டாக்குவதாய் அமைந்துள்ளன.
இதே போல் மற்றொரு நிறுவனம், வேறு சில ஆன்ட்டி வைரஸ் புரோகிராம்களையும் சோதனை செய்து, முடிவை அறிவித்துள்ளது. அவை முதல் சில இடங்களைப் பிடிக்கவில்லை; மேலும் நம்மிடையே அவ்வளவாக அறிமுகம் ஆகாதவை ஆகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470