Subscribe to Gizbot

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் பற்றி உங்களுக்கு தெரியாத 20 விஷயங்கள்

Written By:

ஜெஃப் பெசோஸ் பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் இல்லையென்றால் இந்த பெயரையாவது கேள்வி பட்டிருப்பீர்கள். உலகின் மிக பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அமேசானின் நிறுவனர் தான் ஜெஃப் பெசோஸ். இவரை பற்றி உங்களுக்கு தெரியாத 20 அரிய விஷயங்களை தான் இங்கு நாம் பார்க்க இருக்கின்றோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஜெஃப் பெசோஸ்

#1

ஜெஃப் ஜனவரி மாதம் 12 ஆம் தேதி 1964 ஆம் வருடம் ஜாக்லின் ஜிஸ் ஜார்ஜென்சன் மற்றும் டெட் ஜார்ஜென்சன் தம்பதியருக்கு பிறந்தார். இந்த தம்பதி திருமணமான ஒரு வருடத்தில் சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று மைக் பெசோஸை திருமணம் செய்து கொண்டார். மைக் பெசோஸ் ஜெஃப் 4 வயது இருக்கும் போது தத்தெடுத்துகொண்டார்.

தாத்தா வளர்ப்பில் வளர்ந்தது

#2

ஜெஃப் பெசோஸின் தாத்தா தாரன்ஸ் ப்ரெஸ்டன் அமெரிக்காவின் அணு சக்தி கமிஷனில் பணியாற்றி வந்தார். இவர் ஜெஃப் வாழ்க்கையில் பெரிய பங்காற்றியதோடு, ஜெஃப் கணினியில் கவனம் செலுத்தவும் ஊந்துகோலாக இருந்தார்.

விருப்பம்

#3

சிறு வயதில் இருந்தே கருவிகள் எப்படி இயங்குகிறது, அதில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சரி செய்வது போன்ற காரியங்களில் கவனம் செலுத்தி வந்ததோடு மற்றவர்களை காட்டிலும் தனித்து விளங்கினார்.

கண்டுபிடிப்பு

#4

சோலார் குக்கர்,ரோபோட் செக்யூரிட்டி சிஸ்டம் பெசோஸின் சில கண்டுபிடிப்புகளாகும்

அரிவாளி

#5

உயர் கல்வியில் சிறந்து விளங்கிய ஜெஃப் பள்ளியில் அறிவாளியாக விளங்கியதோடு கணினி மற்றும் எலக்ட்ரிக்கல் இனஜினியரிங் பயின்றார்

இரக்கம் காட்டுவது எளிதல்ல

#6

இரக்கம் செலுத்துவது எளிதான காரியம் இல்லை என்று ஜெஃபின் தாத்தா அவரிடம் கூறியுள்ளார்

முதல் பணி

#7

ஜெஃப் பெசோஸ் முதலில் பிடல் என்ற டெலிகாம் நிறுவனத்தில் பணிபுரிந்தார், அதன் பின் டி.ஈ
ஷா நிறுவனத்தில் சேர்ந்தார்

காதல்

#8

டி.ஈ ஷா நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரிந்த மெக்கென்ஸீயுடன் காதல் கொண்டு இருவரும் 1993 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்

பெண் குழந்தை

#9

ஜெஃப் மெக்கென்ஸீ ஜோடிக்கு 3 ஆண் குழந்தாகள் இருந்தாலும் சீனாவில் இருந்து பெண் குழந்தையை தத்தெடுத்தனர்

அமேசான் உதயம்

#10

டி.இ ஷா நிறுவனத்தில் தான் வகித்த மூத்த அதிகாரி பதவியை துறந்து அமேசான் நிறுவனத்தை துவங்கினார்

பல பெயர்கள்

#11

அமேசான் என்ற பெயரை பெறுவதற்கு முன் பல பெயர்களில் இந்நிறுவனம் செயல்பட்டு வந்தது

சிறு குழுக்கள்

#12

ஜெஃப் பெசாஸ் சிறிய குழுக்களில் செயல்படுவதில் நம்பிக்கை கொண்டிருந்தார்

குறைந்த முதலீடு

#13

ஆரம்பத்தில் இருந்தே குறைவான முதலீடுகளில் ஆர்வம் காட்டினார் ஜெஃப்

நன்கொடை

#14

மற்ற விஷயங்களில் குறைவாக செலவிட்டாலும் நல்ல காரியங்களுக்காக செலவு செய்ய அஞ்ச மாட்டார் ஜெஃப்

வெற்றி

#15

என்றும் போட்டிகளை எளிதாக கொள்ள மாட்டார், எல்லாவற்றிலும் வெற்றி காணாமல் ஓய மாட்டார்

போட்டி

#16

நிறுவனத்தில் நிச்சயம் அனைவரும் போட்டி போட்டு வேலை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார் பெசோஸ்

விபத்து

#17

2003 ஆம் ஆண்டு ஜெஃப் பெசோஸ் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி தலையில் காயமுற்றார்

வாஷிங்டன் போஸ்ட்

#18

2013 ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையை 250 மில்லியன்களுக்கு வாங்கினார்

விண்வெளி

#19

சிறு வயதில் இருந்தே விண்வெளி பயனத்தில் ஆர்வம் கொண்ட ஜெஃப் பெசோஸ் அனைவரும் பயனிக்கும் படியாக குறைந்த கட்டணத்தில் விண்வெளி பயனத்தை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்

அமேசான் ப்ரைம் ஏர்

#20

அமேசானின் புதிய திட்டம் அமேசான் ப்ரைம் ஏர், இதன் மூலம் பொருட்களை ஆளில்லா வானூர்தி மூலம் வினியோகிக்க முடியும், ஆனால் இத்திட்டத்திற்கு இன்னும் அனுமதி வழங்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
20 INTERESTING Things About Jeff Bezos You Probably Didn’t Know

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot