Home
Computer

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் எல்ஜி லேப்டாப்

By Super
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் எல்ஜி லேப்டாப்
எல்ஜி தனது மின்னனு பொருள்கள் மூலம் இந்திய சந்தையில் ஒரு வளர்ந்து வரும் நிறுவனமாக இருக்கிறது. அவர்கள் தமது கணினி மற்றும் மொபைல் போன்களை அப்டேட் செய்வதில் சிறிது கால இடைவெளி விடுவார்கள்.

ஆனால் லேப்டாப் துறையில் இருக்கும் போட்டியை மனதில் வைத்து எல்ஜி நிறுவனம் புதிய எல்ஜி பி430கே என்ற புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

எல்ஜி பி430கேயின் டிசைனைப் பார்த்தால் அது மிக அருமையாக உள்ளது. இதன் பேனல் டைட்டன் கருப்பு அலுமினியத்தால் ஆனது. மேலும் இதன் 14 இன்ச் எச்டி எல்இடி எல்சிடி டஸ்ப்ளே 1366*768 பிக்சல் ரிசலூசனைத் தருகிறது. இதன் எடை மிகவும் குறைவு.

அதாவது இதன் எடை 1.9 கிலோவாகும். இது இன்டல் கோர் ஐ5 - 241எம் ப்ராசஸர் கொண்டுள்ளதால் இதன் வேகம் தாறுமாறாக இருக்கும். இதிலுள்ள டிஎல்என்எ தொழில் நுட்பம் மூலம் இந்த லேப்டாப்பை மற்ற டிவைஸ்களோடு மிக வேகமாக இணைக்க உதவுகிறது.

மற்ற சிறப்புகளை எடுத்துக் கொண்டால் எல்ஜி பி430கே 4ஜிபி ரேம் கொண்டு விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் இயங்குதளத்துடன் வருகிறது. மேலும் இந்த லேப்டாப் ஜிகாபிட் எர்த்நெட் எல்எஎன் இணைப்பு கொண்டு வருவதால் இதன் வைபை 802.11 பி/ஜி/என்னை இயக்குவது மிக எளிது.

மேலும் இதில் ப்ளூடூத் இணைப்பும் உள்ளது. அதுபோல் இது என்பிடியா ஜிஎப் ஜிடி 50 கொண்டு 1ஜிபி மெமரி கொண்டுள்ளது. மேலும் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர்கள் அடுத்ததாக வீடியோ கேம் போன்ற அனைத்து வசதிகளும் இந்த லேப்டாப்பில் உண்டு.

இது 5 இன் 1 மல்டி மீடியா கார்டும் கொண்டுள்ளது. இதன் ஹார்ட் ட்ரைவா 500ஜிபி ஆகும். மேலும் அது எஸ்ஆர்எஸ் ட்ரூ சவுண்ட் மற்றும் டிவிடி சூப்பர் மல்டி ட்ரைவும் கொண்டுள்ளது.

எல்ஜி பி430கேயின் 1.3 மெகா பிக்சல் கேமரா மூலம் தரமான படங்களை எடுக்க முடியும். மேலும் இது ஹெட்போன் மற்றும் மைக்ரோபோன்கள் மற்றும் யுஎஸ்பி போர்ட்டுகளையும் கொண்டுள்ளது.

அதுபோல் எச்டிஎம்ஐ போர்ட்டுகளும் இதில் அடக்கம். அதோடு பாதுகாப்புக்காக எல்இடி கைரேகை அறியும் தொழில் நுட்பத்தையும் கொண்டிருக்கிறது. இதன் அகற்றக் கூடிய 6 லித்தியம் ஐயன் பேட்டரி நீண்ட நேரம் தாங்கக்கூடிய திறனைக் கொண்டது.

எல்ஜி பி430 லேப்டாப்பின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் மலிவு விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X