Home
Computer

புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தியது ப்யூசன் கேரேஜ்

By Super
புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தியது ப்யூசன் கேரேஜ்
முற்றிலும் புதிய தொழில்நுட்பம் அம்சங்களுடன் புதிய டேப்லெட்டை ப்யூசன் கேரேஜ் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்திய மார்க்கெட்டில் பயணத்தை துவங்க இருக்கும் இந்த புதிய டேப்லெட் கிரிட்-10 என்ற பெயரில் வர இருக்கிறது.

செமான்டிக் உயரிய தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இதன் யூஸர் இன்டர்பேஸை தொடர்ந்து மாற்றிக்கொள்ளும் தொழில்நுட்பம் புதிதிலும் புதிது. இது ஆன்ட்ராய்டின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ரணகளப்படுத்தப்போகும் இந்த புதிய டேப்லெட்டுக்கு சரியான போட்டி மார்க்கெட்டில் இருக்காது என நிபுணர்கள் கட்டியம் கூறுகின்றனர். மேலும், பவர் ஆன்/ஆப் பட்டனை தவிர வேறு ஒரு பட்டனை கூட இதில் பார்க்கமுடியாது. அந்தளவுக்கு தொடுதிரையிலேயே அத்துனை செயல்பாடுகளையும் கனக்கச்சிதமாக முடித்துக்கொள்ளும் அளவுக்கு யூஸர் இன்டர்பேஸை புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்ப்டடுள்ளது.

மேலும், குறிப்பிட்ட இடத்தில் செல்ல வேண்டியதை காலண்டரில் குறித்து வைத்தால், அந்த இடத்திற்கு செல்ல வேண்டிய வழிகள், வழியில் உள்ள உயர்தர ரெஸ்டாரண்டுகளையும் கூறிவிடும் வசதியையும் இது பெற்றிருக்கிறது.

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் சென்டிமென்டாக வரும் செய்திகளை கண்டறிந்து அதை உங்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தும் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ட்ஸ் தொழில்நுட்பம் இதன் மதிப்பை எங்கோ கொண்டு போகிறது.

அப்பாயிண்மெட்டுகள், செய்திகள், முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து எச்சரிக்கை செய்வதற்கென தொடுதிரையில் தனி இடத்தையும் இது பெற்றுள்ளது. ஆப்பிள் போன்களில் மட்டும் காணப்படும் மீடியா சூட் தொழில்நுட்பத்தையும் இது கொண்டிருக்கிறது.

1.2 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட என்விஐடிஐஏ-2 ட்யூவல் கோர் பிராசஸர் வேகத்தில் பின்னும் என்பதை ஆணித்தரமாக இப்போதே கூறிவிடலாம். வைஃபை தொடர்பு வசதியுடன் முதலில் வரும் கிரிட்-10 பின்னர் 3ஜியுடன் கூடிய வைஃபை தொடர்பு வசதியுடன் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்திய மார்க்கெட்டில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய டேப்லெட் ரூ.29,000 விலையில் வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X