Home
Computer

ஆசஸ் இஇஇ பாட் ட்ரான்பார்மர் vs சாம்சங் கேலக்ஸி டேப் 10.1 - ஒரு ஒப்பீடு

By Super
ஆசஸ் இஇஇ பாட் ட்ரான்பார்மர் vs சாம்சங் கேலக்ஸி டேப் 10.1  - ஒரு ஒப்பீடு
இந்த ஆண்டு ஆசஸ் நிறுவனம் இஇஇ பாட் ட்ரான்ஸ்பார்மர் என்ற டேப்லெட் கம்ப்யூட்டரையும், சாம்சங் நிறுவனம் டாப் 10.1 என்ற புதிய சூப்பர் டேப்லெட்டையும் சந்தைக்கு கொண்டு வருகின்றன. இரண்டுக்குமே சந்தையில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கலாம்.

இரண்டுமே சிறந்த சக்தி வாய்ந்த செயல்திறனை கொண்டுள்ளன. இரண்டு டாப்லட்டுகளுமே சம அளவில் எல்லா வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் இருக்கின்றன. சாம்சங் டாப் 10.1 புதிய கூகுள் ஆண்ட்ராய்டு ஹனிகோம்ப் 3.1 வெர்ஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வருகிறது. ஆனால், ஆசஸ் இஇஇ பாட் ட்ரான்பார்மர் டேப்லெட் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

இரண்டு டேப்லட்டுகளுமே 1ஜிகாஹெர்ட்ஸ் நிவிடியா ப்ராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் மெமரியை கொண்டுள்ளன. டிஸ்பிளேயை பொறுத்தவரை சாம்சங் டாப் 10.1 டிஎப்டி - எல்சிடியை கொண்டுள்ளது. இரண்டுமே 1280 X 800 ரிசலூஷன் கொண்ட தொடுதிரையைக் கொண்டுள்ளன. ஆசஸ் இஇஇ பாட் ட்ரான்பார்மர் ஐபிஎஸ் டிஸ்பிளேயைக் கொண்டிருந்தாலும் சாம்சுங் டாப் 10.1க்கு இணையான செயல்திறனைப் பெற்றிருக்கிறது.

வைபை 802.11, ப்ளூடூத், மினி-யுஎஸ்பி மற்றும் ஹச்டிஎம்ஐ யுட்டிலிட்டி போன்ற தலைசிறந்த தொடர்பு வசதிகள் இந்த இரண்டிலும் நிறைந்திருக்கின்றன. மற்ற டாப்லட்டுகளில் இத்தகைய அப்டேட் செய்யப்பட்ட வசதிகளை நாம் பார்க்க முடியாது. மேலும் ஆசஸ் இஇஇ பாட் ட்ரான்பார்மர் 32ஜிபி மெமரி வரை விரிவுபடுத்தக்கூடிய மைக்ரோஎஸ்டி ஸ்லாட் உள்ளது. ஆனால் சாம்சங் காலக்ஸி டாப் 10.1ல் இந்த வசதி கிடையாது.

எடையைப் பொறுத்த மட்டில் ஆசஸ் இஇஇ பாட் ட்ரான்பார்மர் 680 கிராமும், சாம்சங் கேலக்ஸி டேப் 10.1 டேப்லட் 595 கிராமும் கொண்டதாக இருக்கின்றன. ஆசஸ் இஇஇ பாட் ட்ரான்பார்மர் 1.2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் 5 மெகா ரியர் கேமராவும் கொண்டுள்ளது. அதே நேரம் சாம்சங் கேலக்ஸி டேப் 10.1 ஹச்டி வீடியோ மற்றும் படங்கள் எடுக்கக்கூடிய 3மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு டேப்லெட்டுகளும் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற முழுமையான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X