Home
Computer

புதிய எச்பி பால்ம் டச்பேட் ஓபல் - எச்பி அறிவிப்பு

By Super
புதிய எச்பி பால்ம் டச்பேட் ஓபல் - எச்பி அறிவிப்பு
எச்பி நிறுவனம் வரும் அக்டோபர் மாதம் புதிய பால்ம் டச்பேட் ஓபல் என்ற டேப்லட்டை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இது லினுக்ஸ் ஓஎஸூடுன் எச்பி வெப்ஓஎஸ் 3.0 என்ற எம்பேடட் ஆபரேட்டிங் சிஸ்டத்தையும் கொண்டுள்ளது.

மேலும் இது 1500மெகாஹெர்ட்ஸ் மைக்ரோப்ராஸஸர் சிப்ஸெட் மற்றும் ப்ரவுசருடன் கூடிய க்யூவல்காம் ஸ்நாப்ட்ரகான் எபிக்யூ-8060 பிராசஸரையும் கொண்டுள்ளது. இதனுடைய ராம் வசதியைப் பார்த்தால் 1024 எம்பி மற்றும் ப்ளாஸ் இஇபிஆர்ஓஎம் ராம் (32ஜிபி பைட்ஸ்) ஆகும்.

மேலும் இது டிஎப்டி டிஸ்பிளேயேயையும் இன்பில்ட் ஜபிஎஸ் வண்ண தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. அதனுடைய திரையின் அளவு வளைவுடன் கூடிய 175 மில்லிமீட்டராகும். மேலும் இது தரமான வீடியோ படங்களை எடுக்கக்கூடிய க்யூவல்காம் அட்ரினோ 220 க்ராபிக் கண்ட்ரோலரையும் பெற்றிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

இதனுடைய ஹார்வேர் வசதியை பொறுத்தவரை இது இன்டக்ரேட்டட் ஆடியோ சப்சிஸ்டத்துடன் ஸ்டீரியோ ஒலியை சப்போர்ட் செய்யும் சானல்களையும் கொண்டுள்ளது. 3.5எம்எம் ஜாக்கும் ஆடியோ அவுட்புட் பயன்பாட்டுக்காக வழங்கப்படுகிறது. இது பல ஜிஎஸ்எம் ப்ரீக்வென்சிகளை சப்போர்ட் செய்கிறது.

மேலும் எச்பி பால்ம் டச்பேட் ஓபலில் செல்லுலர் டேட்டா லிங்குகளான ஜிபிஆர்எஸ்ஸூடன் கூடிய இடிஜிஇ தொழில்நுட்பம், யுஎம்டிஎஸ் மற்றும் ஹச்எஸ்யுபிஎ ஆகியவற்றை வழங்குகிறது. இதனுடைய இன்டர்னல் ஆன்டெனா தடையில்லாமல் சிக்னல்களை வழங்கும்.

இதனுடைய புதிய யுஎஸ்பி 2.0 விரைவான தகவல் பரிமாற்றத்தை வழங்குகிறது. மேலும் இதில் மைக்ரோ-பி யுஎஸ்பி தொடர்பையும் கொடுக்கிறது. அதோடு இதனுடைய ப்ளூடூத் 2.1, வயர்லஸ் லான்/வைபை மற்றும் ஐஇஇஇ 802.11 ஆகியவை விரைவாக இணையதளத்தை இயக்க உதவுகின்றன.

எச்பி பால்ம் டச்பேட் ஓபலின் தொடுதிரை கொரில்லா க்ளாஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஏ2டிபி ஏவிஆர்சிபி சப்போர்ட்டுடன் கூடிய ப்ளூடூத் ஸ்டீரியோ ஆடியோவையும் இது வழங்குகிறது. மேலும் இது எச்பி டச்ஸ்டோன்ஸ் வி2 சார்ஜிங் டாக்கையும் வழங்குகிறது.

ஆனால் இதனுடைய சேமிப்பு வசதியை விரிவுபடுத்த முடியாதது குறையாகப் தெரிகிறது. இது அடிப்படையான கீபோர்ட் மற்றும் ஸ்க்ரோல் வீல் ஆகிய வசதிகள் இதில் இல்லாவிட்டாலும் அது ஒரு பெரிய குறையாக தெரியவில்லை. மேலும் இது அனலாக் ரேடியோ ரிசிவர் ஆகியவற்றையும் வழங்கவில்லை. ஆனால்
எச்பி பால்ம் டச்பேட் ஓபலின் மெனு பாரை இயக்குவது மிகவும் எளிது. எனவே இது பயன்படுத்துவோரை கண்டிப்பாக பரவசப்படுத்தும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X