அனைத்து வசதிகளுடன் மலிவு விலையில் எச்பி லேப்டாப்

Posted By: Staff

அனைத்து வசதிகளுடன் மலிவு விலையில் எச்பி லேப்டாப்
இந்த சந்தையில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய புதிய அம்சங்களுடன் தமது படைப்புகளை அறிமுகப்படுத்துகின்றன. அந்த விதத்தில் பார்த்தால் எச்பி நிறுவனம் இந்த புதிய லேப்டாப்புகளின் விலையை கனிசமாக குறைக்க முயற்சி எடுத்து வருகிறது.

இந்த வரிசையில் புதிய எச்பி 430 வரிசை லேப்டாப்பை எச்பி அறிமுகப்படுத்துகிறது. இந்த லேப்டாப்பு இன்டல் பென்டியம் டூவல் கோர் ப்ராசஸர் கொண்டிருக்கும்.

அதனால் இது உலகத் தரம் வாய்ந்த அளவில் இதன் செயல்பாடு இருக்கும் என்று எச்பி கூறுகிறது.குறிப்பாக வீடியோ கேமிங் வசதிக்காக இந்த லேப்டாப்புகளில் எச்டி க்ராபிக்ஸ் வசதி உள்ளது. எச்பி 430 லேப்டாப் உயர்ந்த டெபினிசன் கொண்ட 14 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வருகிறது.

மேலும் இதன் பிக்சல் ரிசலூசன் 1366X768 ஆகும். அதனால் இதில் படம் பார்ப்பது மிக அம்சமாக இருக்கும். மேலும் இதன் ரேம் 8ஜிபி கொண்டது. அதனால் இதன் செயல்திறன் மிக வலிமையாக இருக்கும்.

எச்பி 430 லேப்டாப்பில் 0.3 மெகா பிக்சல் வெப்காம் உள்ளதால் சாட்டிங் மற்றும் வீடியோ கான்பரன்சிங் மிக அருமையாக இருக்கும். அதுபோல் வைபை மற்றும் ப்ளூடூத் வசதிகளையும் இந்த லேப்டாப் கொண்டுள்ளது. மேலும் இது மைக் இன், ஹெட்போன் அவுட் மற்றும் கார்ட் ரிக்கார்டர் போன்ற வசதிகளையும் கொண்டிருக்கிறது.

எச்பி 430 லேப்டாப்புகள் பேட்டரியைப் பார்த்தால் அது மிகப் பிரமிப்பாக இருக்கும். அதாவது இதன் 6 செல் பேட்டரி மிக எளிதாக விரைவாக ஜார்ஜ் ஆகிவிடும். அதற்காகு குறைந்த மின்திறனே செலவாகும். மேலும் 3 மணி நேரம் வரை தாங்கும் வலிமையை இதன் பேட்டரி கொண்டுள்ளது.

எச்பி 430 லேப்டாப்பின் எடையைப் பார்த்தால் இது 2.27 கிலோவாகும். அதனால் இதை மிக எளிதாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும். அதுபோல் இதன் கீபோர்டும் மிக அழகாக பக்காவாக உள்ளது.

எச்பி 430 லேப்டாப்பின் விலையைப் பார்த்தால் மிக ஆச்சரியமாக இருக்கும். அதாவது நிறைந்த வசதிகளுடன் வரும் இந்த புதிய லேப்டாப்பின் விலை ரூ.19999 மட்டுமே. அதனால் எச்பி 430 லேப்டாப் கண்டிப்பாக இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot