Home
Computer

மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 8 உடன் கைகோர்க்கும் டெல் டேப்லட்டுகள்

By Super
மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 8 உடன் கைகோர்க்கும் டெல் டேப்லட்டுகள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் போன் 7 மேங்கோ இயங்குதளத்தை அறிமுகப்படுத்திய பின் விரைவாகவே டெல் டேப்லட்டுகளுக்காக விண்டோஸ் 8 இயங்குதளத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் மற்ற இயங்கதளங்களோடு போட்டி போட மைக்ரோசாப்ட் முடிவெடுத்துவிட்டது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

மைக்ரோசாப்ட்டின் சிஇஒ மைக்கேல் டெல் ஒரு இணையதளத்தின் மூலம் தமது நிறுவனம் விண்டோஸ் 8 கொண்ட டேப்லட்டுகளை வரும் ஆண்டில் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த புதிய விண்டோஸ் இயங்குதளம் டேப்லட்டுகளை சிறப்பாக இயக்குவதோடு பல சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.

விண்டோஸ் 8 மெட்ரோ யூசர் இன்டர்பேஸ் மற்றும் ஹார்வேர் அக்சலரேசன் போன்ற வசதிகளை டேப்லட்டுகளுக்கு வழங்குகிறது. இந்த புதிய இயங்குதளம் வரும் புதிய ஆண்டின் தொடக்கத்தில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

ஸ்டார்ட் பட்டன்களுக்குப் பதிலாக ஸ்டார்ட் திரையை வழங்கப்போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருக்கிறது. ஆனால் தொடக்கத்தில் இந்த வசதி வராது. ஆனால் விரைவில் இந்த வசதி வந்துவிடும். இந்த மெட்ரோ இன்டர்பேஸ் வசதி அப்ளிகேசன்களை பின் செய்ய உதவியாக இருக்கும். இந்த தொழில் நுட்பம் விண்டோஸ் 7லேயே உள்ளது.

இந்த புதிய வசதியால் லைவ் டைல்களிலேயே எல்லா அப்ளிகேசன்களையும் பின் செய்ய முடியும். அதனால் மிக எளிதாக அப்ளிகேசன்களை அப்டேட் செய்ய முடியும்.

தற்போது மைக்ரோசாப் மற்ற வசதிகளைப் பற்றி எதுவும் தரவில்லை. ஆனால் விரைவில் அதன் ரகசியம் ஊரறிந்த செய்தியாகிவிடும் என நம்பலாம். டெல்லைப் பொறுத்தவரை விண்டோஸ் 8ஐ தமது டேப்லட்டுகளில் வைத்தால் அது லாபமாக இருக்கும் என்று டெல் நம்புகிறது. மேலும் டெல்லின் வாடிக்கையாளர்களுக்கும் இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X