கம்ப்யூட்டர்களுக்கு ஆப்பிள் வழங்கும் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம்

அதன் தொடர்ச்சியாக மேசை கணினி மற்றும் லேப்டப்புக்கான புதிய மேக் ஓஎஸ் எக்ஸ் லயன் 10.7.2 என்ற அப்டேட் வெர்ஷன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய ஓஎஸ் தரமான பாதுகாப்பு வசதிகளுடனும் மற்றும் க்ளவுட் சப்போர்ட்டிங் அப்ளிகேசன்களுடனும் வருகிறது.
ஆப்பிள் இந்த புதிய மேக் ஓஎஸ் X லையன் 10.7.2 ஓஎஸ்ஸை விரைவில் அப்க்ரேட் செய்ய பரிந்துரை செய்கிறது. தகவல்களை சேமிக்க இது அளவுக்கதிகமான சேமிப்பு வசதியை வழங்குகிறது. மேலும் காலண்டர், காண்டாக்ட்டுகள் மற்றும் இமெயில் போன்ற எல்லாவற்றையும் இதில் சேமிக்க முடியும். மேலும் இதை மற்ற டிவைஸ்களுக்கு பரிமாற்றம் செய்யவும் முடியும்.
புதிய மேக் ஓஎஸ் X லையன் 10.7.2ன் மிக முக்கிய வசதி என்னவென்றால் இது ஐக்ளவுடில் ரிமோட் வசதியைக் கொண்டுள்ளது. அதனால் மேக்கைப் பயன்படுத்துபவர்கள் இந்த ரிமோட் வசதியை அனுபவிக்க முடியும். மேலும் இதில் பைண்ட் மை மேக் உள்ளதால் மேக் இயங்குதளத்தில் டிவைசை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
ஆப்பிள் இந்த புதிய மேக் ஓஎஸ் X லையன் 10.7.2ல் டோம்கேட், குயிக் டைம், மற்றும் பிஎச்பி போன்ற வசதிகளையும் சேர்த்திருக்கிறது. இதில் பக்ஸ் முழுமையாக அகற்றப்பட்டு விட்டன. மேலும் இதி்ல் காலண்டர் அப்ளிகேசன், ஓபன் டைரக்டரி அப்ளிகேசன் போன்றவையும் உள்ளன.
மேலும் இந்த புதிய ஓஎஸ்ஸை அப்பிள் வாடிக்கையாளர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மொத்தத்தில் இந்த புதிய மேக் ஓஎஸ் X லையன் 10.7.2ஐ ஒரு பாதுகாப்பு நிறைந்த இயங்குதளம் என்று அழைக்கலாம்.


Click it and Unblock the Notifications